கெளதம் அதானி தலைமையிலான அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம் கடந்த டிசம்பர் 2022 காலாண்டில், ஒருங்கிணைந்த நிகர லாபம் 77.8% அதிகரித்து, 474.72 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 267.03 கோடி ரூபாயாக இருந்தது.
இதே இந்த நிறுவனத்தின் வருவாய் விகிதமானது 22% அதிகரித்து, 3551.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2911.7 கோடி ரூபாயாக இருந்தது என பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செயல்பாட்டு வருவாய் எப்படி?
இதன் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதமானது டிசம்பர் காலாண்டில் 3277.3 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 25% அதிகரித்து, 2613.35 கோடி ரூபாயாக இருந்தது.
இதே டிரேடிங் வணிகத்தில் வருவாய் விகிதமானது 274.67 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டில் 298.35 கோடி ரூபாயாக இருந்தது. ஆக வருவாய் என்பது குறைந்திருந்தாலும், லாபத்தில் உள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம்
ஒருங்கிணைந்த நிகர வருவாய் விகிதமானது, மின் உற்பத்தி, டிரான்ஸ்மிஷன் மற்றும் சப்ளை என பல பிரிவுகளிலும் வளர்ச்சி என பல பகுதிகளிலும் கவனம் செலுத்தியுள்ளது.
எபிட்டா விகிதம் 64% அதிகரித்து, 1477.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 900.9 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மார்ஜின்
இதே மார்ஜின் விகிதமானது 41.6% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 30.9% ஆக இருந்தது.
அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றது. சர்வதேச அளவிலான சவாலான நிலை இருந்து வந்தாலும், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது.
வலுவான வளர்ச்சி பாதை
எங்களிடம் வலுவான வளர்ச்சி பாதை உள்ளது. ஆக இது எங்களின் எதிர்கால வளர்ச்சியினையும் உறுதிப்படுத்தும். இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் அதானி டிரான்ஸ்மிஷன், கடன், மூலதனம், உயர் நிர்வாகம் என பல வணிக நடவடிக்கைகளை வலுவான செயல்திறனை கண்டு வருகின்றது. ஆக இதன் எதிர்காலம் வலுவாக இருக்கும் என நம்பப்படுகின்றது.
இன்றைய பங்கின் விலை?
எனினும் ஹிண்டர்ன் பர்க் ஆய்வறிக்கையின் மத்தியில் அதானி குழும நிறுவனங்கள் பலவும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. குறிப்பாக அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பங்கு விலை, என்.எஸ்.இ-ல் 10% சரிவினைக் கண்டு, 1256.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இதே பி.எஸ்.இ-ல் இப்பங்கின் விலையானது 10% குறைந்து, 1261.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை, இன்றைய உச்ச விலை 1261.40 ரூபாயாகும். இதே இதன் இன்றைய உச்ச விலை 1261.40 ரூபாயாகும். இதே இதன் 52 வார உச்ச விலை 4238.55 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications