அதானி குழும நிறுவனங்கள் ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு பெரும் பிரச்சனையில் சிக்கித் தவித்து வருகின்றன. குறிப்பாக அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. இதற்கிடையில் கடனையும் முன் கூட்டியே திரும்ப செலுத்தவும் வியூகங்களை வகுத்து வருகின்றது.
ஏற்கனவே கணிசமான தொகையினை அடைத்துள்ளது. இதற்கிடையில் தற்போது அதானி டிரான்ஸ்மிஷன் கடன் மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து இன்னும் சில வாரங்களில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி குழுமத்திற்கு கடன்
ஏற்கனவே அதானி குழுமத்தினால் கடன் திரட்ட முடியாது, போதிய கையிருப்பு என்பது கிடையாது. அதிகளவில் கடனை பெற்றுள்ளது என பல குற்றச்சாட்டுகளை சுமத்தியது. மேலும் அதானியிடம் வேறு எந்த சோர்ஸூம் இல்லை என்ற குற்றச்சாட்டினையும் ஹிண்டர்ன்பர்க் முன் வைத்தது. ஆனால் அது இல்லை எனும் விதமாக அதானி குழுமம் முன் கூட்டியே கடனை செலுத்துதல், திட்டமிடுதல் என பல விஷயங்களை செய்து வருகின்றது.
கடன் வாங்கவும் திட்டமில்லை
இந்த நிலையில் தான் அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் கடன் மறுசீரமைப்பையும் வெளியிட திட்டமிட்டுள்ளது. எனினும் கூடுதலாக எந்த கடனையும் வாங்க திட்டமிடவில்லை. கடன் வாங்கி கடனை அடைக்கும் திட்டமும் இல்லை என அறிவித்துள்ளது. குறிப்பாக மூலதன செலவினங்களுக்கான கடன் வாங்கவும் எந்த திட்டமும் இல்லை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
கடன் பத்திரம்?
அதானி குழும நிறுவனங்கள் ஹிண்டர்ன்பர்க் அறிக்கையால் கடந்த சில வாரங்களாகவே பெரும் புயலில் சிக்கியுள்ளன. இந்த சமயத்தில் பத்திர முதலீட்டாளர்களை அழைக்க வங்கிகளை நியமித்தது. எனினும் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில் இதுவும் எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பதும் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
அதானி கடன் பத்திரம்
அதானி குழுமத்தினை சேர்ந்த 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 125 பில்லியன் டாலருக்கும் அதிகமான சரிவினைக் கண்டுள்ளது.
அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் டாலர் பத்திர நிலுவையானது 2026ல் செலுத்த வேண்டியுள்ளது. ஆக இதனை மையமாக கொண்டே அதானி குழுமத்தின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் இருக்கலாம்.
பங்கு விலை நிலவரம்?
அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது இன்றும் 5% சரிவினைக் கண்டு 789.20 ரூபாயாக காணப்படுகின்றது. இதன் 52 வார உச்ச விலையானது 4236.75 ரூபாயாகும். இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 789.20 ரூபாயாகும். இது இன்றும் லோ ப்ரீஸ் ஆகியுள்ளது.
பெரும் தாக்கம்
அதானி குழுமத்தின் இந்த நடவடிக்கையானது இழந்த நம்பிக்கை மீட்டெடுக்க ஒவ்வொரு அடியாக பார்த்து பார்த்து எடுத்து வைத்தாலும், அதானி குழுமத்திற்கு எதிரான சிறு சிறு அறிக்கைகள் கூட, சந்தையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கிடையிலும் அதானி குழும பங்குகள் சரிவினைக் கண்டு வருகின்றன.
அதானி டிரான்ஸ்மிஷன் ஆறுதல்
குறிப்பாக இன்று அதானி டிரான்ஸ்மிஷனின் இந்த அறிக்கைக்கு மத்தியில்,அதானி குழுமம் பற்றிய விக்கிப்பீடியாவின் கருத்தானது வந்துள்ளது. இது மேற்கோண்டு தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் துரைமுகத்தினை சிறப்பாக நிர்வகிக்கும் ஆற்றல் அதானி குழுமத்திற்கு இருப்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோன் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications