அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது இன்று 2.5% அதிகரித்து, 2564.45 ரூபாயாக என் எஸ் இ-யில் முடிவடைந்துள்ளது. இதே பிஎஸ்இ-ல் இப்பங்கின் விலையானது 2.75% அதிகரித்து, 2570 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
அதானியின் டிரான்ஸ்மிஷனின் இந்த ஏற்றமானது, பெஸ்ட் ஸ்மார்ட் மீட்டரிங் நிறுவனத்தினை துணை நிறுவனத்தினை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் ஏற்றம் கண்டுள்ளது.
அதானி டிரான்ஸ்மிஷனின் விரிவாக்கம்
அதானி குழுமமானது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனமாகும். அதானி குழும நிறுவனங்கள் பல்வேறு துறைகளிலும் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம், பெஸ்ட் ஸ்மார்ட் மீட்டரிங் நிறுவனத்தினை அதன் ஸ்மார்ட் மீட்டரிங் வணிகத்திற்காக துணை நிறுவனமாக இணைத்துக் கொண்டதாக கூறியதை அடுத்து, ஆரம்ப மூலதனத்தினையும் அங்கீகரித்துள்ளது.
எவ்வளவு முதலீடு?
இந்த பரிவர்த்தனையில் ஒரு பங்கின் விலையானது 10 ரூபாயாகும். இந்த கையகப்படுத்தலில் மொத்தம் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10,000 பங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனம் இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அதன் வர்த்தக நடவடிக்கைகளை இன்னும் தொடங்கவில்லை என்றும் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டரிங்
இந்த டிஸ்காம்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு, அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட புதுபிக்கப்பட்ட விநியோகத் துறைத் திட்டத்தின் (RDSS) கீழ் இது முக்கியத்துவம் பெறுகிறது. ஆர்டிஎஸ்ஸ்-ன் கீழ், ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டரிங் என்பது முக்கியமான ஒன்றாகும்.
எளிதில் கணக்கிட உதவும்
ஸ்மார்ட் மீட்டர்கள் என்பது அவற்றின் பணப்புழக்கத்தினை சிறப்பான நிர்வகிக்க உதவும் ஒரு தொழில் நுட்பமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பயன்பாடுகள் அளவு உள்ளிட்ட பலவற்றை நிர்வகிக்க உதவுகிறது.
டிஜிட்டல் மின் மீட்டர்களுக்கும், ஸ்மார்ட் மின் மீட்டர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பது கவனிக்கத்தக்கது. இது மின்சாரம் கணக்கிடுவதையும் மிக எளிமையாக்குகிறது. இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் ஏற்கனவே பல மா நிலங்களில் தொடங்கியுள்ளது. ஆக அம்பானியின் இந்த கையகப்படுத்தம் நிச்சயம் அதானி குழுமத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் எனலாம்.


Click it and Unblock the Notifications