இந்தியாவின் முன்னணி மின்சார டிரான்ஸ்மிஷன் நிறுவனமாக விளங்கும் அதானி டிரான்ஸ்மிஷன் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், அதிகளவிலான வருமானத்தைப் பெற வேண்டும் என இலக்குடன் எஸ்ஸல் இன்பரா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரோரா கர்னூல் டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது.
கடந்த சில வருடங்களாக இந்தியாவில் பல துறைகளில் வர்த்தக விரிவாக்கம் செய்து வரும் அதானி குழுமம் தனது முதலீட்டாளர்களுக்கு அதிகளவிலான வருமானத்தையும் நம்பிக்கையும் அளிக்க வேண்டும் என்பதற்காக வரோரா கர்னூல் டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தைப் புதிதாகக் கைப்பற்றியுள்ளது.
கௌதம் அதானி
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி 2020ல் கொரோனா காலகத்தில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது மட்டும் அல்லாமல் பல புதிய வர்த்தக துறையில் இறங்கியுள்ளார்.
குறிப்பாக இதுவரை விமானப் போக்குவரத்தில் எவ்விதமான முன் அனுபவமும் இல்லாத நிலையில் இந்தியாவில் சுமார் 25 சதவீத விமானப் நிலைய வர்த்தகத்தைக் கைப்பற்றியுள்ளார்.
கௌதம் அதானி சொத்து மதிப்பு
இதன் மூலம் இவரது சொத்து மதிப்புக் கொரோனா பாதிப்பு நிறைந்து காணப்பட்ட 2020ஆம் ஆண்டில் மட்டும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 16 பில்லியன் டாலர் அளவில் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் 2021லும் பல துறையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் கௌதம் அதானி தற்போது மின்சார டிரான்ஸ்மிஷன் துறையில் கவனத்தைத் திருப்பியுள்ளார்.
3,370 கோடி ரூபாய்
இந்நிலையில் கௌதம் அதானி தலைமையிலான அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம் சுமார் 3,370 கோடி ரூபாய் தொகைக்கு எஸ்ஸல் இன்பரா நிறுவனத்திடம் இருந்து Warora-Kurnool Transmission Ltd. (WKTL) நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.
இந்தக் கைப்பற்றும் திட்டத்திற்கு மத்திய மின்சாரக் கட்டுப்பாட்டு வாரிய அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளது என் அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம்
அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம் தற்போது கைப்பற்றிய Warora-Kurnool Transmission Ltd. (WKTL) மூலம் மொத்த நெட்வொர்க் அளவு 17,200 சர்கியூட் கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டு உள்ளது.
இதில் 4,850 கிலோமீட்டர் சர்கியூட் கிலோமீட்டர் தொலைவிலான இணைப்புகள் பல்வேறு கட்டமைப்புப் பணிகளுக்கு இடையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதானி டிரான்ஸ்மிஷன் அசத்தல்
இந்தக் கைப்பற்றல் மூலம் அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம் இந்தியா முழுவதும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது மட்டும் அல்லாமல் மின்சார டிரான்ஸ்மிஷன் துறையில் நாட்டின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக உயர்ந்துள்ளது என இந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அனில் சார்தானா தெரிவித்துள்ளது.
அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள்
மார்ச் 22ஆம் தேதி 787 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 4.40 சதவீதம் வளர்ச்சி அடைந்து 871.40 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இன்று மும்பை பங்குச்சந்தை விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை விலையில் மாற்றமில்லை.
அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் கடந்த 5 நாட்களில் 12.01 சதவீதமும், ஒரு மாதத்தில் 14.95 சதவீதமும், மாதத்தில் 249.75 சதவீதமும், ஒரு வருடத்தில் 371.79 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications