அதானிக்கு சொந்தமான அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் எஸ்ஸார் பவர் டிரன்ஸ்மிஷன் லைனை ரூ.1913 கோடிக்கு வாங்கியது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த டிரான்ஸ்மிஷன் லைனை வாங்கியதை அடுத்து அதானி நிறுவனத்தின் பங்குகள் திடீரென 4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் பங்குசந்தை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விற்பனை
எஸ்ஸார் பவர் டிரன்ஸ்மிஷன் நிறுவனம் தன்னிடமிருந்த இரண்டு டிரான்ஸ்மிஷன் லைன்களில் ஒன்றை ரூ.1913 கோடிக்கு அதானி நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. 465 கிலோமீட்டர் டிரான்ஸ்மிஷன் லைனை அதானி நிறுவனம் பெற்றதன் மூலம் மத்திய இந்தியாவில் அதானி நிறுவனம் கால் வைத்ததாகவும் இதனையடுத்து நிறுவனத்திற்கு மிகப் பெரிய எதிர்காலம் இருப்பதாகவும் கூறப்பட்டது.
அதானி டிரான்ஸ்மிஷன்
இதுகுறித்த தகவல் வெளியானவுடன் அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பங்குகள் திடீரென 4 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த புதிய டிரான்ஸ்மிஷன் லைனை அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் பெற்றதன் மூலம் அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் மதிப்பு மற்றும் வளர்ச்சி உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
4% வளர்ச்சி
இந்த நிலையில் எதிர்பார்த்தவாறே அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 4% உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளியன்று ரூ.1,953 என முடிவடைந்த இந்நிறுவனத்தின் பங்கு, இன்று காலை அதன் மதிப்பு ரூ.2,029.65 என உயர்ந்துள்ளது.
எஸ்ஸார் டிரான்ஸ்மிஷன்
எஸ்ஸார் டிரான்ஸ்மிஷன் லைனை அதானி நிறுவனம் வாங்கியதன் மூலம் 20,000 ckt km இலக்கை அடைந்துள்ளது. இந்த டிரான்ஸ்லேஷன் லைன் மூன்று மாநிலங்களில் 460 கிலோமீட்டர் கொண்டிருப்பதால் அந்த பகுதிகளில் சில கட்டமைப்புக்கள் மாற்றப்பட்டு உள்ளதாகவும் அதானி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
கடன்
இந்த நிலையில் எஸ்ஸார் நிறுவனத்திற்கு 30,000 கோடி ரூபாய் கடன் இருந்த நிலையில் இந்த டிரான்ஸ்மிஷன் லைனை விற்பனை செய்தது மற்றும் சில ஏற்பாடுகளால் அதன் கடன் 6 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications