இந்தியாவின் முன்னணி தொழிலதிரும், 2வது பெரும் பணக்காரருமான கௌதம் அதானியின் நிறுவனம், குஜராத்தின் முந்ரா துறைமுகம் வழியாக ஈரான் நாட்டின் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (LPG) இறக்குமதி செய்ததாக அமெரிக்க வழக்கறிஞர்கள் விசாரணை நடத்தி வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) திங்களன்று தெரிவித்தது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் விவகாரத்தில் இருந்து மெல்ல மெல்ல வெளியே வரும் அதானி குழுமத்திற்கு இது புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. என்ன பிரச்சனை..? அதானி குழுமத்தில் எந்த நிறுவனம் தற்போதைய விவகாரத்தில் சிக்கியுள்ளது..?

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நடத்திய விசாரணையில், குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திற்கும், பெர்சியன் வளைகுடா பகுதிக்கும் இடையே பயணித்த எல்பிஜி கப்பல்கள், பொருளாதாரத் தடைகளை மீறி செயல்படும் கப்பல்களை போலவே செயல்பாட்டதாக கண்டறியப்பட்டது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல்களின் செயல்பாடுகளை அமெரிக்க நீதித்துறை ஆய்வு செய்து வருவதாக, விவரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சரி எல்பிஜி கப்பல்கள், அமெரிக்க நீதித்துறை கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு என்ன தவறு செய்தது..?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மே மாதத்தில், ஈரான் நாட்டின் எண்ணெய் அல்லது பெட்ரோகெமிக்கல் பொருட்களை வாங்குவது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இதற்கு மாறாக செயல்படும் நாடுகள் அல்லது தனிநபர்கள் மீது உடனடியாக இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு எதிராக அதானி குழுமத்தின் முந்த்ரா துறைமுக நடவடிக்கைகள் உள்ளதாக தற்போது அமெரிக்க நீதித்துறை விசாரணை நடத்தி வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் தனிப்பட்ட முறையில் உறுதி செய்யவில்லை.
அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, "ஈரான் நாட்டின் எல்பிஜி வர்த்தகத்திலும் அல்லது தடைகளை மீறும் வகையில் எந்தவிதமான செயல்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை" என்று திட்டவட்டமாகத் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
மேலும், அமெரிக்க நீதித்துறை இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகத் தங்களுக்கு தெரியாது என்று நிறுவன செய்தித் தொடர்பாளர் WSJ-இடம் கூறியுள்ளார். எனவே வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள அறிக்கையின் உண்மை தன்மை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க அதிகாரிகள் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி மீது மின் விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக லஞ்சம் வழங்கியதாகவும், அமெரிக்க முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ள வேளையில், சில மாதங்களில் ஈரான் LPG விவகாரம் வெடித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை "ஆதாரமற்றவை" என்று அதானி குழுமம் அறிவித்தாலும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்த ஈரான் நாட்டு எண்ணெய்யை அதானி குழுமம் இறக்குமதி செய்ததா அல்லது இறக்குமதி செய்ய முந்ரா துறைமுகம் பயன்படுத்தப்பட்டதா..? என்பதை வெளிப்படையாக குறிப்பிடவில்லை.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications