இந்தியாவின் இருபெரும் தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கெளதம் அதானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள்.
ஃபோர்ப்ஸ்-ம் ரியல் டைம் பில்லியனர் அறிக்கையின் படி முகேஷ் அம்பானி சர்வதேச அளவில் 6வது பெரிய பணக்காரர் ஆவார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 103.20 பில்லியன் டாலராகும்.
இதே கெளதம் அதானி 101.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஏழாவது இடத்திலும் உள்ளார்.
அதானி Vs அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அதானி குழும நிறுவனம் பங்குகள் சரிவினைக் கண்டு வரும் நிலையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதானி குழும நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் மே 6, 2022 அன்று 2.47 லட்சம் கோடி ரூபாய் சரிவினைக் கண்டு, 13.95 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 0.98 லட்சம் கோடி அதிகரித்து. 18.72 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதானி குழும பங்குகள் சரிவு
அதானி குழுமத்தின் அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலையானது 37% சரிவினைக் கண்டுள்ளது. இதே அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு 29% சரிவும், அதானி போர்ட்ஸ் 8.50% சரிவிலும், அதானி எண்டர்பிரைசஸ் 0.99% ஆகிய நிறுவனங்கள் சரிவில் காணப்படுகின்றன. அதானி டோட்டல் கேஸ், அதானி பவர் மற்றும் அதானி வில்மர் பங்குகள் முறையே 1.73%, 2.30% மற்றும் 4.87% அதிகரித்துள்ளன.
ஏற்றம் காணலாம்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மார்ஜின் விகிதம் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியினால் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே அதானி குழும பங்குகள் ஓவர்வேல்யூ மதிப்பில் இருப்பதால் சரிவினைக் கண்டுள்ளது. இது இன்னும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் சில்லறை விற்பனை, டெலிகாம் அனைத்து துறைகளிலும் மேம்பட்டு வருகின்றது. இது மேற்கொண்டு பங்கு விலையை ஊக்குவிக்கலாம்.
சாதகமான காரணியா?
எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் சந்தையில் தொடர்ந்து, நல்ல வருவாயினை ஈட்டி வருகின்றனர். இது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவன வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அதானி குழும பங்குகளில் புராபிட் புக்கிங் இருக்கலாம். இது அதானி குழுமத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications