அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்ட 13 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதானி குழுமத்தின் ப்ரோமோட்டர்கள் உடன் தொடர்பு இருக்கலாம் என்று செபி சந்தேகிப்பதாக சுப்ரீம் கோர்ட் அமைத்த குழு கண்டறிந்துள்ளது.
இதன் வாயிலாக அதானி குழுமம் பங்குகளின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டு ஆதாயம் அடைந்திருக்கலாம் என கூறப்பட்டாலும் இதற்கான ஆதாரத்தை செபி இன்னும் திரட்டவில்லை என சிறப்பு குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அதானி குழுமத்தால் ரீடைல் முதலீட்டாளர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பதையும் இந்த சிறப்பு குழு சுப்ரீம் கோர்ட்-க்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையால் அதானி குழுமம் அதிகப்படியான வர்த்தக பாதிப்பை எதிர்கொண்டது என்றால் மிகையில்லை. ஜனவரி 24 முதல் பிப்ரவரி 27 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பில் 12.4 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பை இழந்துள்ளது.
மார்ச் 9 ஆம் தேதி நிலவரப்படி 10 லட்சம் கோடி ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவுடன் 2023ல் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 49.05 சதவீதமும், அதானி போர்ட்ஸ் பங்குகள் 16.32 சதவீதமும், அதானி பவர் பங்குகள் 20.78 சதவீதமும், அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 69.17 சதவீதமும், அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 52.49 சதவீதமும், அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 80.64 சதவீதமும், அதானி வில்மார் பங்குகள் 33.12 சதவீதமும், ஏசிசி லிமிடெட் பங்குகள் 29.11 சதவீதமும், அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் 23.37 சதவீதமும், NDTV பங்குகள் 47.65 சதவீதமும் சரிந்துள்ளது.
இந்த நிலையில் இன்று அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து வரும் வேளையில் இதை கண்காணித்து வரும் சுப்ரீம் கோர்ட் சிறப்பு குழு வெளியிட்ட அறிக்கையில் ரீடைல் முதலீட்டாளர்கள் இந்த பிரச்சனையால் எவ்வளவு பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை விளக்கியுல்ளது.

அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தின் மூலம் அதானி குழும நிறுவன பங்குகளில் முதலீடு செய்த ரீடைல் முதலீட்டாளர்கள் 3700 கோடி ரூபாய் அளவிலான இழப்பை எதிர்கொண்டு உள்ளனர். இதுவே HNI எனப்படும் பணக்கார முதலீட்டாளர்கள் செய்த முதலீடுகளையும் கணக்கிட்டால் மொத்த இழப்பு 22000 கோடி ரூபாய் வரையில் உயர்கிறது. இதை செபியின் பங்கு முதலீட்டாளர்கள் விபரங்கள் அடிப்படையாக வைத்து திரட்டப்பட்டு உள்ளது.
சுப்ரீம் கோர்ட் செபியின் 6 மாதம் கால அவகாச கோரிக்கையை ரத்து செய்து வெள்ளிக்கிழமை அறிவித்த 3 மாத அவகாசம் அடிப்படையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி செபி அதானி குழுமம் குறித்து குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி மொத்தமும் வெளிச்சத்திற்கு வரும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications