அதானி வில்மர் லிமிடெட் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 16.5% அதிகரித்து, 246 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 211 கோடி ரூபாயாக இருந்தது.
இதே அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 4.99% அதிகரித்து, 418.80 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலை ஒரு வருடத்தில் 56% மேலாக ஏற்றம் கண்டுள்ளது.
அதானி வில்மர் வருவாய்
இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் விகிதம் 7% அதிகரித்து, 15,438.05 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 14,730.92 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு உணவு மற்றும் எஃப்.எம்.சி.ஜி துறையில் அதன் பங்கு 15% வளர்ச்சி கண்டுள்ளது. இதே இதன் விற்பனை 27% அதிகரித்துள்ளது.
தொடர்ந்து வணிக விரிவாக்கம்
அதானி வில்மர் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஆங்ஷூ மல்லிக், பாதுகாப்பான சுகாதாரமான மற்றும் சத்தான உணவு பொருட்கள் பிரிவில் தேவையானது நிலையானதாக உள்ளது.
சமையல் எண்ணெய் பிரிவில் சப்ளை சங்கிலி, லாகிஸ்டிக்ஸ் மற்றும் வாடிக்கையாளர்களுடனான உறவுகளை நாங்கள் மேம்படுத்துகிறோம். இது எங்களின் உணவு வணிகத்தினையும் மேம்படுத்த உதவும். தொடர்ந்து எங்கள் வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் விதமாக பல பொருட்களை போர்ட்போலியோவில் இணைத்து வருகிறோம். இது எங்களின் வளர்ச்சியினையும் இது ஊக்குவிக்கிறது.
விற்பனை அதிகரிப்பு
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எங்கள் பிரீமியம் மற்றும் பிரபலமான பிராண்டுகளின் போர்ட்போலியோவினை, இந்தியா முழுவதும் ஆதரிக்கப்படுகிறது. இந்த காலாண்டில் பண்டிகைகள் மற்றும் திருமணங்கள், கிராமப்புற சந்தைகளில் படிப்படியாக மீட்சி மற்றும் காரீப் பயிர் ஆகியவற்றின் பின்னணியில் தேவையானது அதிகரித்தது. இதன் காரணமாக விற்பனையும் அதிகரித்தது.
அதானி குழுமத்தினை சேர்ந்த மற்ற நிறுவனங்களும் இந்த வாரத்தில் அதன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இதே அதானி பவர் லிமிட்டெட் நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி பவர்
அதானி பவர் நிறுவனம் ஒருங்கிணைந்த நிகரலாபம் 96% குறைந்து, 8.7 கோடி ரூபாயாக டிசம்பர் காலாண்டில் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 218.5 கோடி ரூபாயாக இருந்தது.
இதே அதன் அதானி பவர் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 44.8% அதிகரித்து, 7764.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 5360.9 கோடி ரூபாயாக இருந்தது. இதே இதன் எபிட்டா விகிதம் 17% சரிவினைக் கண்டு, 1469.7 கோடி ரூபாயாக சரிவினைக் கொண்டுள்ளது.
எபிட்டா மார்ஜின் விகிதம்
இதே எபிட்டா மார்ஜின் விகிதம் 18.9% ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 33% ஆக இருந்தது. இதற்கிடையில் அதானி பவர் பங்கு விலை 5% அதிகரித்து காணப்பட்டது.
இதே செப்டம்பர் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வரிக்கு பிந்தைய லாபம், 401.60% அதிகரித்து, 695.53 கோடி ரூபாயாக அதிகரித்தது. இது முந்தைய ஆண்டில் 230.6 கோடி ரூபாய் நஷ்டம் கண்டிருந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications