இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் கெளதம் அதானியின் அதானி குழுமம், பல்வேறு துறைகளில் வணிகம் செய்து வருகின்றது.
இதில் பல்வேறு துறைகளையும் விரிவாக்கம் செய்வதற்காக நிதியினையும் திரட்டி வருகின்றது.
அந்த வகையில் அதானியின் மிக பிரபரலமான எப்எம்சிஜி நிறுவனம் தான் அதானி வில்மர். இந்த ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் இருந்து நிதியினை திரடட திட்டமிட்டுள்ளது.
அதானி + வில்மர் கூட்டு நிறுவனம்
1999 முதல் இத்துறையில் முன்னணி நிறுவனமாக உள்ள அதானி வில்மர், 50:50 விகிதமுள்ள ஒரு கூட்டு நிறுவனமாகும். இது அதானியிடம் 50% பங்கும், சிங்கப்பூரினை சேர்ந்த வில்மர் 50% பங்கினையும் கொண்டுள்ளன. இந்த கூட்டணி நிறுவனம் தான் பொது பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. முன்னதாக இந்த நிறுவனம் ஐபிஓ மூலம் சுமார் 4,500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட திட்டமிட்டு இருந்தது.
ஐபிஓ தொடக்கம்
அதன் பிறகு 3,600 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது.இவ்வாறு திரட்டப்படும் நிதியானது அதன் வணிகத்தினை விரிவாக்கம் செய்ய பயன்படும் என தெரிவித்துள்ளது. இந்த பங்கு விற்பனையானது ஜனவரி 27ம் தேதி இருக்கலாம் என கூறப்படுகிறது.
முகமதிப்பு
இவ்வாறு வெளியிடப்படும் பங்கின் முகமதிப்பானது 1 ரூபாயாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதன் ஊழியர்கள், தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள், துணை நிறுவனங்கள் என பலரும் அடங்குவர்.
ஜனவரி 27 அன்று தொடங்கும் பங்கு விற்பனையானது, ஜனவரி 31 அன்று முடிவடையவுள்ளது. விலை நிர்ணயம் குறித்தான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்.
சமையல் எண்ணெய் விற்பனையாளர்
இந்நிறுவனம் இந்தியாவில் சமையல் எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னோடியாக உள்ளது. 10 மாநிலத்தில் சுமார் 22 உற்பத்தி ஆலைகளை வைத்துள்ளது இந்தியா முழுவதும் சுமார் 5,500 வினியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்களைக் கொண்டு உள்ளது. மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில் அதானி வில்மர் நிறுவனம் 654.56 கோடி ரூபாய் லாபத்தைப் பதிவு செய்தது, இது கடந்த ஆண்டின் 394.60 கோடி ரூபாய் அளவை விடவும் அதிகமாகும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications