அதானி வில்மர் ஐபிஓ..விலை நிலவரம் என்ன.. எப்போது அறிமுகம்..!

இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமங்களில் ஒன்றான கெளதம் அதானியின் அதானி குழுமம், பல்வேறு துறைகளில் வணிகம் செய்து வருகின்றது. இதில் பல்வேறு துறைகளையும் விரிவாக்கம் செய்வதற்காக நிதியினையும் திரட்டி வருகின்றது.

அந்த வகையில் அதானியின் மிக பிரபரலமான எப்எம்சிஜி நிறுவனம் தான் அதானி வில்மர். இந்த ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் இருந்து நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளது.

இதன் பொது பங்கு வெளியீடானது ஜனவரி 27 அன்று தொடங்கவுள்ளது. ஜனவரி 31 அன்று பங்கு வெளியீடு முடிவடையவுள்ளது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

இதற்கிடையில் பங்கு வெளியீட்டிற்கான பங்கின் விலையினை நிர்ணயம் செய்துள்ளது. இதில் ஒரு பங்கின் விலையானது 218 - 230 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதன் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ஜனவரி 25 அன்றே பங்கு வெளியிடவுள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின் மூலம் 3,600 கோடி ரூபாய் நிதியினையும் திரட்டவுள்ளது.

 

ஐபிஓ தொடக்கம்

ஐபிஓ தொடக்கம்

அதன் பிறகு 3,600 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது.இவ்வாறு திரட்டப்படும் நிதியானது அதன் வணிகத்தினை விரிவாக்கம் செய்ய பயன்படும் என தெரிவித்துள்ளது. இந்த பங்கு விற்பனையானது ஜனவரி 27ம் தேதி இருக்கலாம் என கூறப்படுகிறது.

பட்டியல் எப்போது?

பட்டியல் எப்போது?

இந்த நிறுவனத்தின் பங்கினை என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ-யில் பிப்ரவரி 8,2022ல் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு வெளியிடப்படும் பங்கின் முகமதிப்பானது 1 ரூபாயாக இருக்கும் என்று சில தினங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதன் ஊழியர்கள், தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள், துணை நிறுவனங்கள் என பலரும் அடங்குவர்.

கூட்டு நிறுவனம்

கூட்டு நிறுவனம்

1999ம் ஆண்டு முதல் இத்துறையில் முன்னணி நிறுவனமாக உள்ள அதானி வில்மர், 50:50 பங்கு விகிதமுள்ள ஒரு கூட்டு நிறுவனமாகும். இது அதானியிடம் 50% பங்கும், சிங்கப்பூரினை சேர்ந்த வில்மர் 50% பங்கினையும் கொண்டுள்ளன. இந்த கூட்டணி நிறுவனம் தான் பொது பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. முன்னதாக இந்த நிறுவனம் ஐபிஓ மூலம் சுமார் 4,500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட திட்டமிட்டு இருந்தது. இதனை தற்போது 3,600 கோடி ரூபாயாக குறைத்துள்ளது.

 சமையல் எண்ணெய் விற்பனையாளர்

சமையல் எண்ணெய் விற்பனையாளர்

இந்தியாவில் சமையல் எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னோடியாக உள்ளது. 10 மாநிலத்தில் சுமார் 22 உற்பத்தி ஆலைகளை வைத்துள்ளது இந்தியா முழுவதும் சுமார் 5,500 வினியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்களைக் கொண்டு உள்ளது. மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில் அதானி வில்மர் நிறுவனம் 654.56 கோடி ரூபாய் லாபத்தைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+