அதானி குழுமத்தைப் புரட்டிப்போட்ட 3 FPI கணக்குகள் பிரச்சனை இந்நிறுவனப் பங்குகளின் விலையை மோசமான சரிவுக்குத் தள்ளப்பட்டது மட்டும் அல்லாமல் தற்போது புதிதாக ஒரு நிறுவனத்தை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட முயற்சி செய்த அதானி குழுமத்திற்குச் செபி முட்டுக்கட்டை போட்டு உள்ளது.
செபி தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமத்தின் கிளை நிறுவனமான அதானி வில்மார் நிறுவனத்தின் ஐபிஓ விண்ணப்பத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள என வெளியிட்டுள்ளது.
3 எப்பிஐ முதலீட்டுக் கணக்குகள்
அதானி குழுமத்தின் 4 நிறுவனத்தின் 3 எப்பிஐ முதலீட்டு கணக்குகள் மூலம் சுமார் 45,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்த 3 FPI கணக்குக்களுக்கு அடிப்படை விபரங்கள் இல்லாமல் இருக்கும் காரணத்தால் இந்தப் பணம் மற்றும் முதலீட்டுக்கு உரிமையாளர் யார் என்பது குறித்தும், இந்த முதலீட்டுக்கும் அதானி குழுமம் மற்றும் அதன் முதலீட்டாளர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதைச் செபி ஆய்வு செய்துள்ளது.
ஆசியா பணக்காரர்கள் பட்டியல்
இந்தச் செய்தி வெளியானதில் இருந்து அதானி குழுமப் பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த காரணத்தால் ஆசியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கௌதம் அதானி வெளியேற வேண்டிய மோசமான நிலையும் உருவானது.
செபி போட்ட தடை
தற்போது அதானி குழுமம் புதிதாக ஒரு நிறுவனத்தை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடத் திட்டமிட்ட போது அதற்கும் 3 FPI கணக்குகளில் 45,000 கோடி ரூபாய் முதலீட்டுப் பிரச்சனையைக் காரணம் காட்டி செபி அதானி வில்மார் ஐபிஓ விண்ணப்பத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
அதானி வில்மார் நிறுவனம்
அதானி வில்மார் நிறுவனம் அதானி குரூப் மற்றும் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த வில்மார் குரூப் முதலீட்டில் உருவான நிறுவனம். இந்நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளை அதானி குழுமமும், மீதமுள்ள 50 சதவீத பங்குகளை வில்மார் குரூப் வைத்துள்ளது.
எப்எம்சிஜி நிறுவனம்
அதானி வில்மார் ஒரு எப்எம்சிஜி நிறுவனம், இந்த ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் இருந்து சுமார் 4,500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட திட்டமிட்டு இருந்தது. இந்நிறுவனம் இந்தியாவில் சமையல் எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னோடியாக உள்ளது.
22 உற்பத்தி ஆலைகள்
10 மாநிலத்தில் சுமார் 22 உற்பத்தி ஆலைகளை வைத்துள்ளது இந்தியா முழுவதும் சுமார் 5,500 வினியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்களைக் கொண்டு உள்ளது. மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில் அதானி வில்மார் நிறுவனம் 654.56 கோடி ரூபாய் லாபத்தைப் பதிவு செய்தது, இது கடந்த ஆண்டின் 394.60 கோடி ரூபாய் அளவை விடவும் அதிகமாகும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications