பங்குகளை விற்கும் அதானி.. முதலீட்டாளர்களே உஷார்..!

சென்னை: அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் வில்மர் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டணி நிறுவனமான அதானி வில்மர் லிமிடெட்டில் உள்ள பங்குகளை விரைவில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளன. இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியின் விதிமுறைகளை பின்பற்ற இக்கூட்டணி தனது பங்கு இருப்பை குறைக்கும் நடவடிக்கையை எடுக்க உள்ளனர்.

ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்ட அதானி குரூப் பங்குகளை, சரிவில் இருந்து மீண்டு வர முயற்சிக்கிறது. இந்த நிலையில், அதானி வில்மர் நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகள் வைத்திருக்கும் அதானி என்டர்பிரைசஸ் மற்றும் வில்மர், இந்திய பங்குச்சந்தை சட்டங்களை பின்பற்ற, நிறுவனத்தில் சுமார் 13% பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன. தற்போதைய பங்கு விலையின் அடிப்படையில், இந்த பங்குகளின் மதிப்பு சுமார் 735 மில்லியன் டாலர்கள் ஆகும்.

பங்குகளை விற்கும் அதானி.. முதலீட்டாளர்களே உஷார்..!


இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான கௌதம் அதானியின் குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் மற்றும் வில்மர் ஆகியவை அதானி வில்மர் நிறுவனத்தில் தலா 44% பங்குகள் வைத்திருக்கின்றன. அதன் முலம் அதானி வில்மார் நிறுவனத்தில் ப்ரோமோட்டர் குழு சுமார் 88% பங்குகளை தனது இருப்பாக வைத்துள்ளது.

செபி உத்தரவின் படி மூன்று ஆண்டுகளுக்குள் ப்ரோமோட்டர் குழு-வின் பங்கு இருப்பை சுமார் 75% ஆக குறைக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் பிப்ரவரி மாதத்தில் முடிவடைகிறது. இந்த நிலையில் தான் பங்குகளை விற்பதும், புதிய பிராண்டுகளை வாங்குவதற்கும் என பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இந்த பங்குகள் பிப்ரவரி மாதத்திற்குள் ஒன்று அல்லது இரண்டு தவணைகளில் விற்பனை செய்யப்படலாம். மேலும், அதானி வில்மார் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் விரைவில் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்களை சந்திக்கத் தொடங்குவார்கள்.

அதானி என்டர்பிரைசஸ் மற்றும் வில்மர் இன்டர்நேஷனல் நிறுவனங்கள் இது குறித்து கருத்து தெரிவிக்காத நிலையில், ஜெஃபரிஸ் ஃபைனான்சியல் குரூப் இன்க்., நுவாமா வெல்த் மேனேஜ்மெண்ட் லிமிடெட் மற்றும் எஸ்.பி.ஐ கேபிடல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள், அதானி என்டர்பிரைசஸ் மற்றும் வில்மர் நிறுவனங்களுடன் தங்களது பங்கு விற்பனை திட்டங்களில் இணைந்து செயல்படுகின்றன.

1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அதானி வில்மர் நிறுவனம் இந்தியாவில் 23 தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. இந்தியர்களுக்கு சமையலறை அன்றாட தேவைகளான சமையல் எண்ணெய், கோதுமை மாவு, அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை விற்பனை செய்கிறது. இந்த ஆண்டில், நிறுவனத்தின் பங்கு விலை 2.6% உயர்ந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான அதானி குழுமத்தின் FMCG பிரிவு நிறுவனமான அதானி வில்மர், இத்துறையில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மாபெரும் திட்டத்தைத் தீட்டியுள்ளது. இதற்கான நிதியை திரட்டவும் இந்த பங்குகளை விற்பனை செய்யப்படலாம்.

அதானி குரூப் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வு பொருட்கள் சந்தையில் தனது இருப்பை வலிமைப்படுத்தும் திட்டத்துடன் மூன்று மசாலா, பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் ரெடி-டு-குக் பிராண்டுகளை வாங்க உள்ளது.
அதானி குழுமம் இந்த 3 பிராண்டுகளை நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைந்துள்ள நிறுவனங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் சுமார் 1 பில்லியன் டாலர் வரையிலான தொகையை முதலீடு செய்யலாம் என்று கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+