சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான அதானி குழுமத்தின் FMCG பிரிவு நிறுவனமான அதானி வில்மர், இத்துறையில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மாபெரும் திட்டத்தைத் தீட்டியுள்ளது. ஏற்கனவே அதானி குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகம் பெரும் மாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராகி வரும் வேளையில், சில முக்கிய நிறுவனத்தில் பங்கு இருப்பை குறைக்கவும் முடிவு செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில் அதானி குரூப் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வு பொருட்கள் சந்தையில் தனது இருப்பை வலிமைப்படுத்தும் திட்டத்துடன் மூன்று மசாலா, பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் ரெடி-டு-குக் பிராண்டுகளை வாங்க உள்ளது. டாடா முதல் அம்பானி வரையில் தற்போது ரீடைல் வர்த்தகத்தில் பெரிய அளவிலான விரிவாக்கம் செய்து வருகிறது, இதன் வரிசையில் தற்போது அதானி குழுமம் இணைந்துள்ளது.

இதேபோல் அதானி குழுமம் இந்த 3 பிராண்டுகளை நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைந்துள்ள நிறுவனங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் சுமார் 1 பில்லியன் டாலர் வரையிலான தொகையை முதலீடு செய்யலாம் என்று கூறப்படுகிறது.
அதானி குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகம் அதானி வில்மர் நிறுவனத்தில் அதிகப்படியான முதலீடுகளைச் செய்ய மிகவும் ஆர்வமாகவும், தீவிரமாகவும் உள்ளது. இதேவேளையில் செபியின் ப்ரோமோட்டர் பங்கு இருப்பு தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்க அதானி குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகம் அதானி வில்மர் நிறுவனத்தில் சிறிய அளவிலான பங்குகளை விற்க தயாராகி வருகிறது.
ஜூலை மாதத்தின் துவக்கத்தில், Adani Wilmar-ன் கூட்டாளிகளான கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் மற்றும் சிங்கப்பூர் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வில்மர் இண்டர்நேஷ்னல் சிறுபான்மை பங்குகளை விற்பதற்கு ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்தது. இரண்டு நிறுவனங்களும் மொத்தம் 13 சதவீத பங்குகளைச் சமமாக விற்பதற்கான திட்டத்தை ஆய்வு செய்து வருகிறது.
சமீபத்தில் ரிலையைன்ஸ் ரீடைல் தலைவர் ஈஷா அம்பானி மளிகை பொருட்கள் அனைத்தையும் தனது சொந்த இண்டிபென்டன்ஸ் என்ற பிராண்டின் கீழ் விற்பனை செய்யும் புதிய வர்த்தகத்தை கிட்டத்தட்ட ஒரு வருடமாக குஜராத்தில் விரிவாக்கம் செய்து வருகிறது. இந்த வர்த்தக மாடல் குஜராத்தில் வெற்றி பெறுவதை தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய உள்ளது.
இதேபோல் டாடா குழுமம் தனது நுகர்வோர் வர்த்தகம் அனைத்தையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்தது மட்டும் அல்லாமல் ஸ்னாக்ஸ் முதல் ரெடி டூ குக் வரையில் பல துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
இந்த வரிசையில் தான் அதானி குழுமம் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் 3 பிராண்டுகளை மசாலா, பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் ரெடி-டு-குக் பிராண்டுகளை வாங்க முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications