இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், முந்தைய அரசின் பல்வேறு திட்டங்களை மறுஆய்வு செய்ய துவங்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவின் அதானி குழுமத்துடன் இலங்கை அரசு செய்துள்ள காற்றாலை மின்சார ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யும் என்று அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த முயற்சிக்கும் இந்தியாவின் 2வது பெரும் பணக்காரருக்கு இது ஒரு பெரிய தடையாக அமைந்துள்ளது.
இலங்கையில் 2 வருடங்களுக்கு முன்பு பணவீக்கம் உச்சக்கட்ட நிலையில் இருந்து போது அந்நாட்டில் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகளவிலான பற்றாக்குறை உருலாக்கி மக்கள் தவித்தனர். இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் பெட்ரோல், டீசல் முதல் அரிசி, பருப்பு வரையில் அதிகப்படியான உதவிகளை செய்தது.

இந்த மோசமான நிலைக்கு முக்கிய காரணம் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான மோசமான ஆட்சி முறை தான், இதன் எதிரொலியாக மக்கள் புரட்சி வெடித்து அவர் நாட்டை விட்டே வெளியேறி 2022 ஜூலை மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ-வை தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே ஆட்சியை பிடித்து இந்திய அரசின் உதவிகளையும், முதலீடுகளையும் பெற்று இலங்கை பொருளாதாரத்தை நிலைப்படுத்தினார். ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஆட்சியில் 2.9 பில்லியன் டாலர் கடனை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்று இலங்கை பொருளாதாரத்தை மீட்டு எடுத்தார்.
ஆனாலும் ரணில் விக்கிரமசிங்கே சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தோற்றுப்போனார், இந்த தேர்தலில் அனுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு ஆட்சிக்கு வந்துள்ளார். அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசு முந்தை ஆட்சி காலக்கத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட, நடைமுறைக்கு வந்த விதிகளையும், திட்டங்களையும் ஆய்வு செய்ய துவங்கிய போது தான் அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்ட காற்றாள் திட்டமும் மறுஆய்வுக்கு வந்துள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்டின் திட்டங்களுக்கான மின் கட்டணங்களை முந்தைய அரசு அங்கீகரித்தது பிரச்சனை என்று வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹேரத் செவ்வாய்க்கிழக்கு அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புதிய அரசு நவம்பர் 14 அன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இந்த ஒப்பந்தத்திற்கு புதிய வழிக்காட்டுதலை கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.
இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசாநாயக்க-வின் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று தான் இது. தான் ஆட்சியை பிடித்தால் ரணில் விக்கிரமசிங்கே ஆட்சியில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் நடைபெற்ற மூன்று மூனை போட்டியில் வெற்றி பெற்ற திசாநாயக்க, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இலங்கையின் எனர்ஜி துறைக்கும் இத்திட்டம் ஒரு அச்சுறுத்தல் என்று கூறி அதை ரத்து செய்வதாக உறுதியளித்திருந்தார்.
இந்த ஒப்பந்தத்தில் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்பட்டால் ஆசியாவின் இரண்டாவது பணக்காரராக இருக்கும் கௌதம் அதானிக்கு பெரிய அடியாக இருக்கும். அதானி குழுமம் இலங்கையில் பல உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறது. அமெரிக்க வளர்ச்சி நிதி கழகத்தின் ஆதரவுடன் கொழும்பு கண்டெய்னர் கப்பல் துறை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களும் இதில் அடங்கும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications