2023 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்துள்ள நிலையில் இந்த வருடத்தில் முக்கியமான விஷயங்கள், பெருமைப்படும் விஷயங்கள் என பலவற்றை மக்கள் அசைபோடும் வேளையில் லண்டன் ரியல் எஸ்டேட் துறை சார்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு லண்டனில் விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த வீடு 25,000 சதுர அடி மேஃபேர் மாளிகை பகுதியில் இருக்கும் அபெர்கான்வே ஹவுஸ் என்றும், அதை வாங்கியவர் ஒரு இந்திய பில்லியனர் என்றும் அறிவித்துள்ளது. இது லண்டன் ரியல் எஸ்டேட் துறைக்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் லண்டனின் மிகவும் விலையுயர்ந்த வீட்டை சுமார் 138 மில்லியன் பவுண்டு, இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ.1446 கோடிக்குக் கோவிட் வேக்சின் தயாரிப்பிலும், ஏற்றுமதியிலும் முன்னோடியாக இருக்கும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவரான அதார் பூனவல்லா வாங்க உள்ளார்.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII) இன் தலைமை நிர்வாக அதிகாரி அபெர்கான்வே வீட்டை அவரும், அவரது குடும்பமும் இங்கிலாந்தில் இருக்கும்போது தங்குவதற்கும், நிறுவனத்தின் பணிகளைச் செய்ய ஒரு பேஸ்-ஆகவும் மாற்ற உள்ளார்.
அபெர்கான்வே வீடு சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் விருந்தினர் இல்லமாகும், நன்கொடையாளர்கள், தொழில்நுட்ப கூட்டாளிகளுக்கு பார்ட்டி அளிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும். மேலும் லண்டனில் உருவாக்கப்பட்டு உள்ள இந்தப் பேஸ்மென்ட் மூலம் இந்தியாவில் இருந்து செய்ய முடியாத உலகளாவிய வாய்ப்புகளை அணுகுவதற்குச் சீரம் குழுமத்திற்கு உதவும் எனக் கூறப்படுகிறது.
1920களில் கட்டப்பட்ட இந்த SII நிறுவனத்தின் பிரிட்டன் கிளை நிறுவனம் வாங்க உள்ளது. 138 மில்லியன் பவுண்ட் என்ற அதிர்ச்சியூட்டும் விலையில் லண்டன் அபெர்கான்வே ஹவுஸ் விற்கப்பட்டு உள்ள நிலையில், இந்நகரத்தில் இதுவரையில் விற்கப்பட்ட இரண்டாவது மிக விலையுயர்ந்த வீடு இது தான்.
முதல் இடத்தில் இருக்கும் வீடு 2-8a ரட்லேண்ட் கேட், இது 2020 இல் 210 மில்லியன் பவுண்ட்-க்கு விற்கப்பட்டது. அதார் பூனவல்லா மேஃபேர் மாளிகை போலந்து நாட்டு கோடீஸ்வரரான டொமினிகா குல்சிக்கிடம் இருந்து வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications