பெங்களூரு: பெங்களூரில் நிலவும் தண்ணீர் நெருக்கடி மற்றும் சிக்கல்களுக்கு மத்தியில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB), குழாய்களில், ஏரேட்டர்கள் பொருத்துவதை கட்டாயமாக்கி உள்ளது. திடீரென BWSSB யிடம் இருந்து வந்த அறிவிப்பின் பெயரில், ஏரேட்டர்களின் தேவை அதிகரித்ததன் காரணமாக, இதற்கு பெங்களூரில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குழாயிலிருந்து வெளியேறும் நீரின் அளவைக் கட்டுப்படுத்த ஏரேட்டர்கள் பயன்படுகின்றன.
கர்நாடகாவின் தலைநகரில் நிலவும் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக, BWSSB, மார்ச் மாத இறுதிக்குள், அதிகமான தண்ணீர் குழாய்களை பயன்படுத்துவோருக்கு ஏரேட்டர்களைக் கட்டாயமாக்கியது. மேலும், இதனை பின்பற்றாத நபர்களிடம் இருந்து ரூ. 5,000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

BWSSB இன் உத்தரவைத் தொடர்ந்து, ஏரேட்டர்களை வாங்குவதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஏரேட்டர்களுக்கான தேவை திடீரென அதிகரித்ததால், சந்தையில் இப்போது ஏரேட்டர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
"சுமார் நான்கு லட்சம் ஏரேட்டர்கள் ஏற்கனவே குழாய்களில் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் நீர் நுகர்வு 30-40 சதவீதம் இதனால் குறைந்துள்ளது. இப்போது அதிக தண்ணீர் கிடைக்கிறது" என்று BWSSB தலைவர் ராம் பிரசாத் மனோகர் கூறியுள்ளார்.
"கிட்டத்தட்ட பாதி அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்கனவே ஏரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பொருந்தாத சில குழாய்களிலும் பொருத்தப்பட உள்ளன. ஆனால் தற்போது ஏரேட்டர்களின் சப்ளை மிகவும் குறைவாக உள்ளது. சப்ளையர்கள் மாதந்தோறும் சுமார் 300 ஏரேட்டர்களை விற்கின்றனர், ஆனால் இப்போது இதற்கான தேவை ஆயிரக்கணக்கில் உள்ளது என்று பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமைப்பு (பிஏஎஃப்) பொதுச் செயலாளர் சதீஷ் மல்லையா கூறினார்.
ஏரேட்டர்கள் எப்படி நீர் நுகர்வை குறைக்கின்றன என்பதைப் பார்ப்போம்: நீர் நுகர்வைக் குறைப்பதில் ஏரேட்டர்களின் பங்கை விளக்கிய BWSSB அதிகாரிகள், முன்பு ஒரு குழாயில் 1 நிமிடத்திற்கு 10 லிட்டர் தண்ணீர் வரும். ஆனால், ஏரேட்டர்களைத் தண்ணீர் குழாய்களில் பொருத்துவதன் மூலம் 1 நிமிடத்திற்கு 3 லிட்டராக தண்ணீர் வருவதைக் குறைக்க முடியும் என்று கூறியுள்ளனர்.
BWSSB தலைவர் ராம் பிரசாத் மனோகர், "சுத்திகரிக்கப்பட்ட நீர் மற்றும் ஏரேட்டர்களின் அதிகரித்த பயன்பாடு பெங்களூரில் தண்ணீர் நிலைமையை மேம்படுத்த உதவுகிறது. மேலும், தற்போது 62 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இருக்கிறது என்றும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கு இனி தட்டுப்பாடு இல்லை, என்றும் கூறியுள்ளார்.
இந்த ஏரேட்டர்களை தண்ணீர் குழாயில் பொருத்திக் கொள்ளலாம், அதன் மூலம் எங்கும் சிந்தாத ஸ்ட்ரீம்களாக தண்ணீரைப் பெற முடியும். இது தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் பகுதிகளுக்கு உதவியாக இருக்கும்.
ஏரேட்டரின் நன்மைகள்: இதன் மூலம் தண்ணீர் சிந்தாமல் கிடைக்கும். தண்ணீரை சேமிக்கவும், மேலும், டேங்க்கில் இருந்து தண்ணீர் வரும்போது தூசிகளை வடிகட்டிக் கொள்ள முடியும். தண்ணீர் வரத்து சீராகவும், சமமாகவும் இருக்கும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications