ஜியோ பைபர்-ல் புதிதாக ரூ.7,500 கோடி முதலீடு.. பேச்சுவார்த்தையில் இறங்கிய அபுதாபி நிறுவனம்..!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோ டெலிகாம் பிரிவு தனது வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்குடன் புதிய சேவையை அறிமுகம் செய்யவும், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் தொடர்ந்து முதலீட்டு ஈர்த்து வருகிறது.

இந்நிலையில், தற்போது 1 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான InvIT-ஜியோ டிஜிட்டல் பைபர் நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் அதாவது 7,500 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்ய, அபுதாபி அரசு முதலீட்டு நிறுவனமான Abu Dhabi Investment Authority ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் 2வது முறையாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஜியோ டெலிகாம்

ஜியோ டெலிகாம்

ஏற்கனவே Abu Dhabi Investment Authority ஜியோ டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனத்தில் 5,683.50 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்து இந்நிறுவனத்தின் 1.16 சதவீத பங்குகளை ஜூன் 7ஆம் தேதி கைப்பற்றியது.

அபுதாபி நிறுவனம்

அபுதாபி நிறுவனம்

உலகின் பல்வேறு நிறுவனங்களில் சுமார் 700 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் மற்றும் சொத்துக்களில் அபுதாபி அரசு முதலீட்டு நிறுவனம் முதலீடு செய்து, உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனமாகத் திகழ்கிறது.

தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டவர் இன்பராஸ்டக்சர் டிரஸ்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய InvIT-Jio Digital Fibre நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய 2வது முறையாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

2019ஆம் ஆண்டே இந்த முதலீடு குறித்து இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் வர்த்தகம் மற்றும் செயலாக்கம் விதிமுறைகளை அபுதாபி நிறுவனம் விரும்பாத நிலையில் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டது.

 

ஜியோ டிஜிட்டல் பைபர்

ஜியோ டிஜிட்டல் பைபர்

2019ல் நடந்த பேச்சுவார்த்தையில் InvIT-Jio Digital Fibre கூட்டணி நிறுவனத்தில் InvIT நிறுவனத்தின் 20 முதல் 25 சதவீத பங்குகளைக் கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தியது.

தற்போது மீண்டு பேச்சுவார்த்தை துவங்கியுள்ள நிலையில் இதே திட்டத்தில் அபுதாபி நிறுவனம் முதலீடு செய்யப்போகிறதா..? அல்லது புதிய திட்டத்தில் முதலீடு செய்யப்போகிறதா என்பது குறித்துத் தகவல் வெளியாகவில்லை.

 

ஜியோ பைபர் மற்றும் டவர் வர்த்தகம்

ஜியோ பைபர் மற்றும் டவர் வர்த்தகம்

2019 ஏபர்ல் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் தனது பைபர் மற்றும் டவர் வர்த்தகத்தை டவர் இன்பராஸ்டக்சர் டிரஸ்ட் உடன் இணைந்து 2 பிரிவுகளாகப் பிரித்தது. Jio Digital Fibre Pvt Ltd (JDFPL) மற்றும் Reliance Jio Infratel Pvt Ltd (RJIPL) ஆகத் தனித்தனி வர்த்தகப் பிரிவாகப் பிரித்தது.

இவ்விரண்டு நிறுவனத்திலும் டவர் இன்பராஸ்டக்சர் டிரஸ்ட் தலா 51 சதவீத பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்தது. மீதமுள்ள 49 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் துணை நிறுவனமான Reliance Industrial Investments and Holdings Ltd (RIIHL) வைத்துள்ளது.

 

1 பில்லியன் டாலர் முதலீடு

1 பில்லியன் டாலர் முதலீடு

ரிலையன்ஸ் ஜியோ இதுவரை 15 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்து இருந்தாலும் அது அனைத்தும் டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவைக்கானது மட்டுமே. ஆனால் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்படு வரும் முதலீடு இத்திட்டம் தான் ஜியோவின் அடித்தளம்.

இந்தியாவில் டெலிகாம் சேவைக்கு, டெலிகாம் டவர் மற்றும் பைபர் கட்டமைப்பு முக்கியம். இதுவும் ஜியோவின் அதிவேக இண்டர்நெட், 5ஜி நெட்வொர்க் ஆகியவற்றைச் செயல்படுத்த பைபர் நெட்வொர்க் மிகவும் அவசியமான ஒன்று என்பதால் தான் தற்போது தனியாக இத்துறை வர்த்தகத்திற்கு முதலீட்டை ஈர்க்க உள்ளது ஜியோ.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+