மும்பை: அதிகளவிலான செலவினங்களால் ஆதித்யா பிர்லா நிறுவனம் எதிர்பார்த்ததை விட, கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் லாபம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் இதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 37 சதவிகிதம் அதிகரித்து, 256 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 186 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் வருவாய் 8 சதவிகிதம் அதிகரித்து 4,299 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 3,978 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முக்கிய காரணம் பன்முக வணிகமே என்றும் கூறப்படுகிறது. மேலும் தற்போதைய வணிக சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வணிகத்தின் தரத்திலும் வலுவான கவனம் செலுத்துவதன் மூலம், இதன் வளர்ச்சியை இந்த நிறுவனம் சம நிலைப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வகையில் நிறுவனம் தொடர்ந்து ஒழுக்கமான அணுகுமுறையை பின்பற்றுகிறது என்றும் ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் கூறியுள்ளது.
இதன் வங்கி அல்லாத ஹவுஸிங் ஃபைனான்ஸ் பிரிவில் மொத்த கடன் வழங்கள், 4 சதவிகிதம் வளர்ச்சி கண்டு, 60,477 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 57,945 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே ஆதித்யா பிர்லா ஃபைனான்ஸ் அதன் நிகரலாபம் 32 சதவிகிதம் அதிகரித்தும் 273 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும் இதன் நிதி வழங்கல் தொடர்ந்து இரண்டாவது காலாண்டிலும் 48,400 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. நிகர வட்டி வரம்பானது குறைந்து, 5.28 சதவிகிதமாக சரிந்துள்ளது.
ஆதித்யா பிர்லா லைஃப் இன்சூரன்ஸ் மொத்த பிரிமீய வளர்ச்சி 78 சதவிகிதம் அதிகரித்து, 315 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே இதன் சில்லறை வணிகமானது 67 சதவிகிதம் பங்களித்தது என்றும் கூறப்படுகிறது. அதிலும் கடந்த காலாண்டில் இத்துறையில் ஒரு வலுவான வளர்ச்சியை கண்டுள்ளதாகவும், ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்களிப்பை மேம்படுத்தியதை தொடர்ந்து, தனி நபர் முதல்ஆண்டு பிரிமியம் 20 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கின் விலையானது 2.60 சதவிகிதம் அதிகரித்து, 86 ரூபாயாக முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications