தங்கள் பிள்ளைகள் தங்களை விட வளர்வதை விரும்பாத பெற்றோர்கள் மிகக் குறைவுதான். புகழின் உச்சியில் இருப்பவர்கள் கூட நாளை தங்கள் குழந்தைகளால் அறியப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். இந்திய கோடீஸ்வரர் அனைவருக்கும் நன்கு தெரிந்த குமார் மங்கலம் பிர்லா இந்த விஷயத்தில் அதிர்ஷ்டசாலிதான். ஆம், அவரது மூத்த மகள் அனன்யா பிர்லா இன்று தனது தந்தையின் பெயரையும், புகழையும் வானளவு உயர்த்திக் காட்டியுள்ளனர்.
28 வயதான அனன்யா பிர்லா மற்றும் அவரது சகோதரர் 25 வயதான ஆர்யமான் விக்ரம் பிர்லா ஆகியோர் சமீபத்தில் ஆதித்ய பிர்லா ஃபேஷன் மற்றும் ரீடெய்ல் லிமிடெட் (ABFRL) இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர். 60 பில்லியன் டாலர் வணிக சாம்ராஜ்யத்திற்குள் தலைமைப் பாத்திரங்களை ஏற்ற பிர்லா குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறையை அடைந்தவர்கள் இவர்கள் தான்.

அனன்யா மற்றும் ஆர்யமான் இருவரும் மிக இளம் வயதிலேயே தொழில் முனைவோர் திறன் மற்றும் வணிக புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். நிர்வாகத்தில் அவர்களின் நவீன நுண்ணறிவு மற்றும் வணிக புத்திசாலித்தனம் நிறுவனத்திற்கு பயனளிக்கும் என்று வாரியம் நம்புகிறது.
அனன்யாஸ்ரீ பிர்லா என்று பிரபலமாக அறியப்படும் அனன்யா கலை மற்றும் கலாச்சாரத் துறையில் திகைப்பூட்டும் அடையாளமாகவும் திகழ்கிறார். ஒரு தொழில்முனைவோர் தவிர, அவர் ஒரு சிறந்த பாடகி மற்றும் பாடலாசிரியர் ஆக உள்ளார். 2016 ஆம் ஆண்டு இசையில் அறிமுகமான அனன்யா, சீன் கிங்ஸ்டன், அஃப்ரோஜாக் மற்றும் மூட் மெலடீஸ் போன்ற சர்வதேச கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
மும்பையில் உள்ள அமெரிக்கன் ஸ்கூல் ஆஃப் பாம்பேயில் பள்ளிப்படிப்பை முடித்த அவர் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்பை முடித்தார். 2020 ஆம் ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மேவரிக் மேனேஜ்மென்ட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்திய கலைஞர் என்ற பெருமையை அனன்யா பெற்றுள்ளார்.
அனன்யா கிராமப்புற பெண்களுக்கு நன்மையளிக்கும் விதமாக அவர்களின் மீது கவனம் செலுத்தி மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனமான ஸ்வதந்த்ரா மைக்ரோஃபினின் நிறுவினார்.மனநல ஆதரவுக்கான ஒரு முன்முயற்சியில் இவர் Ikai Asai ஐ Mpower உடன் இணைந்து நிறுவினார்.
எகனாமிக் டைம்ஸ் பனாச்சி ட்ரெண்ட்செட்டர்ஸ் மூலம் அனன்யா 2016 ஆம் ஆண்டின் இளம் வணிக நபராக இருந்தார். இந்த பிர்லா வாரிசு 2018 ஆம் ஆண்டில் GQ இன் மிகவும் செல்வாக்கு மிக்க இந்தியர்கள் பட்டியலில் இடம் பெற முடிந்தது.
பைனான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, அனன்யா பிர்லாவின் நிகர மதிப்பு ரூ.1093008278 கோடி ஆகும். ஆதித்யா பிர்லா ஃபேஷன் மற்றும் ரீடெய்ல் லிமிடெட் என்பது இந்திய முன்னணி நிறுவனமான ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு பகுதியாகும். மார்ச் 31, 2024 நிலவரப்படி நிறுவனம் 1.7 பில்லியன் டாலர் வருவாய் மற்றும் 11.9 மில்லியன் சதுர அடி சில்லறை விற்பனையைக் கொண்டுள்ளது.
நிறுவனம் முன்னணி ஃபேஷன் பிராண்டுகள் மற்றும் பல்வேறு சில்லறை விற்பனைகளில் புதுமைகளை புகுத்தி விற்பனை செய்து வருகிறது. இது இந்தியாவின் முதல் பில்லியன் டாலர் ஃபேஷன் பவர்ஹவுஸ் ஆகவும் விழங்குகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications