கொடிய கொரோனாவின் பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற நிதி.. ரூ.500 கோடியை வாரி வழங்கிய ஆதித்யா பிர்லா..

உலகம் முழுக்க கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாக்கம் அடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையானது 55,737 ஆக அதிகரித்துள்ளது.

நாளுக்கு நாள் கொரோனாவின் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்தியாவும் கொரோனாவில் பிடியில் சிக்கி சீரழிந்து வருகிறது.

ஏற்கனவே பொருளாதார மந்த நிலையில் சிக்கி சீரழிந்த இந்தியாவுக்கு, மேற்கொண்டு இது பெருத்த அடியாகவே கருதப்படுகிறது.

அதிகரிக்கும்ம் தாக்கம்

அதிகரிக்கும்ம் தாக்கம்

இப்படி இருக்கையில் நாளுக்கு நாள் இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. என்ன தான் அரசு முன்னெச்சரிக்கை எடுத்திருந்தாலும், மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவிலும் கணிசமாக அளவு பாதிப்பு, அடுத்த இரண்டு வாரத்தில் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் பாதிப்பு?

இந்தியாவில் பாதிப்பு?

இந்தியாவில் தற்போது வரையில் 2,470 பேர் கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு தாக்கம் அடைந்துள்ள நிலையில், 62 பேர் பலியாகியுள்ளனர். இது இன்னும் அடுத்து வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றவும், போதிய மருத்துவ வசதிகளை செய்யவும் தங்களால் ஆன உதவியினை பிஎம் கேர் எனும் அக்கவுண்டுக்கு நிதியாக அனுப்பலாம். இது நாட்டு மக்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

வாரி வழங்கிய வள்ளல்கள்

வாரி வழங்கிய வள்ளல்கள்

பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க பல பெரிய தொழில் அதிபர்களும், தனி நபர்கள், பிரபலங்கள் என பலரும் வாரி வழங்கி வருகின்றனர். இதனையடுத்து மும்பையினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆதித்யா பிர்லா குழுமம் 500 கோடி ரூபாய் நிதியினை வாரி வழங்கியுள்ளது.

எதற்கு? எவ்வளவு?

எதற்கு? எவ்வளவு?

குறிப்பாக இதில் 400 கோடி ரூபாய் பிரதமர் நிவாரண நிதி உதவிக்கும் 50 கோடி ரூபாயில் ஒரு மில்லியன் எண்ணிக்கையில் என்95 பேஸ் மாஸ்குகளும் மற்றும் 2.80 ஆயிரம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்கும் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிக தேவை உள்ளது

அதிக தேவை உள்ளது

இது குறித்து நிறுவனத்தின் தலைவர் ராஜஸ்ரீபிர்லா கூறியதாவது: தற்போதைய நிலமையின் தீவிரத்தை காணுகையில் சுகாதார உதவி நிதி மற்றும் பொருள் உதவிக்கான கட்டாய தேவை உள்ளது என கூறியுள்ளார். உண்மையில் இது போன்ற அசாதாரன நிலைகளில் தான் சில மனிதர்களின் மனிதாபிமானத்தினை உணர முடிகிறது. ஹேட்ஸ் ஆப் யு சார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+