ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஃபேஷன் மற்றும் லைப் ஸ்டைல் நிறுவனமான டிஎம்ஆர்டபுள்யு (TMRW) விராட் கோலி கணிசமான பங்குகளை வைத்திருக்கும் Wrogn பிராண்டில் 125 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
Universal Sportsbiz Pvt. Ltd (USPL) என்ற நிறுவனத்தின் கீழ் Wrogn என்ற ஃபேஷன் பிராண்ட் செயல்பட்டு வருகிறது. நவீன ஆடைகளை விற்பனை செய்யக்கூடிய இந்த பிராண்டில் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் ஆக்ஸெல் (Accel)ஆகிய நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ளன.

நவீன ஆடைகள் விற்பனையில் வளர்ந்து வரும் பிராண்டான Wrogn-இல் தற்போது ஆதித்யா பிர்லா குழுமம் 16 சதவீத பங்குகளை வாங்கும் பொருட்டு 125 கோடி முதலீடு செய்துள்ளது.
இது தொடர்பாக ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஃபேஷன் மற்றும் ரீடெய்ல் பிரிவு நிறுவனமான டிஎம்ஆர்டபுள்யு மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், தற்போதைக்கு சிறிய அளவிலான முதலீடு செய்திருப்பதாகவும் எதிர்காலத்தில் இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
20223 ஆம் நிதி ஆண்டில் Wrogn பிராண்ட் 343 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த பிராண்ட் அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக மாறும் என ஆதித்யா பிர்லா குழுமம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அடுத்தக்கட்டமாக முன்னனி ஈ-காமர்ஸ் தளங்களில் இந்த பிராண்டின் விற்பனையை அதிகரிப்பது, கடைகளை கொண்டு வருவது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wrogn பிராண்டினை பொறுத்தவரை விராட் கோலி முதலீட்டாளராக மட்டுமில்லாமல் நிறுவன விளம்பர தூதராகவும் செயல்பட்டு வருகிறார். இதனிடையே ஆதித்யா பிர்லா குழுமத்தின் முதலீட்டின் மூலம் இந்த பிராண்ட் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக ஆக்செல் நிறுவனத்தின் தலைவர் மகேந்திரன் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
ஆதித்யா பிர்லா குழுமத்தை பொறுத்தவரை இந்தியாவின் மிகப்பெரிய சந்தையான ஃபேஷன் சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் டிஎம்ஆர்டபிள்யு நிறுவனத்தை மிகப்பெரிய ஃபேஷன் ரீடெய்லராக மாற்றுவதை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
ஆதித்யா பிர்லா குழுமம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிஎம்ஆர்டபள்யு என்ற பேஷன் நிறுவனத்தை தொடங்கியது. 444 கோடி ரூபாய் முதலீடு செய்து பல்வேறு ஃபேஷன் பிராண்டுகளிலும் கணிசமான பங்குகளை வாங்கி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஃபேஷன் மற்றும் லைப் ஸ்டைல் சந்தையானது இரண்டாவது மிகப்பெரிய வாடிக்கையாளர் பிரிவாகும். இதன் மதிப்பு 110 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இதில் 10% ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications