டெல்லி: இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் குழுமமான ஆதித்யா பிர்லா குழுமம் "இந்திரியா" என்ற பிராண்டின் பெயரில் ரூ. 5000 கோடி ரூபாய் முதலீட்டில் நகை வணிகத்தில் களமிறங்கியுள்ளது. ஆதித்யா பிர்லா குழுமம் ஏற்கனவே சிமெண்ட் , ஃபேஷன், மெட்டல்ஸ், நிதி சேவைகள், ஜவுளி மற்றும் பெயிண்ட் உள்ளிட்ட துறைகளில் கால் பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நகை விற்பனையிலும் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
நாவல் ஜுவல்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் இந்திரியா என்ற பிராண்டின் பெயரில் நகை வணிகம் நடைபெற இருக்கிறது . இதன்படி ஆதித்யா பிர்லா குழுமம் டெல்லி ,ஜெய்ப்பூர், இந்தூர் ஆகிய நகரங்களில் கடைகளை நிறுவியுள்ளது. அடுத்த 6 மாத காலத்திற்குள் இந்தியாவின் முக்கியமான 11 நகரங்களில் தங்களது கடையை விரிவுபடுத்துவது என இவர்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவில் பிராண்டட் நகை வணிகத்தில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து விட வேண்டும் என்பதுதான் தங்களது இலக்கு என இந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்திரியா பிராண்டின் அறிமுக நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார மங்கலம் பிர்லா , அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இந்திரியா பிராண்ட் ஆண்டுக்கு 50 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சி அடையும் என தெரிவித்துள்ளார்.
தற்போது தங்களிடம் கிட்டத்தட்ட 15,000 தனித்துவமான நகைகள் இருப்பதாகவும், நாடு முழுவதிலும் இருந்து 3500 நகை வடிவமைப்பாளர்களைக் கொண்டு இவை வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தங்களுடைய நகைக்கடைகளில் ஒவ்வொரு 45 நாட்களுக்கு ஒரு முறையும் புதிய டிசைன்கள் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் இருக்கக்கூடிய சராசரியான பிராண்டுகளை விட தங்களுடைய கடைகள் 40 சதவவீதம் அளவில் பெரியதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
நாவல் ஜுவல் வணிகத்திற்கு இயக்குனராக திலீப் கௌரவம் தலைமை செயல் அதிகாரியாக சந்திப் கோலியும் செயல்படுவார்கள் என ஆதித்யா பிர்லா குழுமம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக பிரதான நகரங்களில் தங்களுடைய சில்லறை விற்பனை கடைகளை திறக்கவும் பின்னர் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் கடைகளை திறக்கவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தான் மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. எனவே தற்போது மக்களிடையே நகை வாங்குவதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. இது தங்களுக்கு ஒரு பாசிட்டிவான வளர்ச்சியை கொடுக்கும் என நம்புவதாக ஆதித்யா பிர்லா குழுமம் தெரிவிக்கிறது. இந்தியாவில் சில்லறை நகை விற்பனை தொழிலின் சந்தை மதிப்பு 6.7 லட்சம் கோடி ரூபாய் , இது 2030 ஆம் ஆண்டில் 13 லட்சம் கோடியாக உயரும் என்றும் மதிப்பிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிர்லா குழுமம் அண்மையில் தான் பெயிண்ட் தொழில் களமிறங்கி பிர்லா ஓபஸ் என்ற ஒரு புதிய பிராண்டனை அறிமுகம் செய்தது. இதனை அடுத்து பிர்லா பைவோட் என்ற ஒரு ஈகாமர்ஸ் வணிக தளத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications