மும்பை: இந்தியாவில் காஸ்மெட்டிக் எனப்படும் அழகு சாதன சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பிர்லா மற்றும் அம்பானி உள்ளிட்ட மிகப்பெரிய தொழில் குழுமங்களும் இந்த பிரிவை கைப்பற்றுவதற்காக தீவிரமாக இயங்கி வருகின்றன.
இந்தியாவில் தற்போது பல்வேறு உள்நாட்டு நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. குறிப்பாக அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பிரிவில் பல்வேறு நிறுவனங்களும் சொந்தமாக பல்வேறு தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன . ஈ-காமர்ஸ் வளர்ச்சி இந்த நிறுவனங்களுக்கு எல்லாம் பெரும் அளவில் லாபம் ஈட்டி தந்துள்ளது.

இந்த நிலையில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் மகள் அனன்யா பிர்லா இந்திய காஸ்மெட்டிக்ஸ் பிரிவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளார். 30 வயதான அவர் தேசிய அளவிலான காஸ்மெடிக் பிராண்டை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தற்போது ஆதித்யா பிர்லா குழுமத்தின் வாரிய குழு உறுப்பினர்களில் ஒருவராக இருக்கக்கூடிய அனன்யா பிர்லா 62 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.
பிர்லா காஸ்மெட்டிக் என்ற பெயரில் இவர் இந்த ஆண்டிலேயே அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி இந்தியாவில் சில்லறை வணிகப்பிரிவில் பேஷன் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதன் மூலம் ஈஷா அம்பானிக்கும் அனன்யா பிர்லாவுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் ஈஷா அம்பானியின் தலைமையில் மேக்கப் மற்றும் பிற அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யக்கூடிய டைரா என்ற நிறுவனத்தை தொடங்கி இகாமர்ஸ் வாயிலாக பல்வேறு காஸ்மெட்டிக் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. ஏற்கனவே அழகு சாதன பொருட்கள் விற்பனையில் டாடா குழுமம் டாடா கிளிக் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தில் நடத்தி வருகிறது.
இந்தியாவில் இந்த சந்தை ஆண்டுதோறும் 11 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. 2028 ஆம் ஆண்டுக்குள் இந்த சந்தையானது இந்தியாவில் 34 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டதாக மாறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன . தற்போது இது 21 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் சுகர் காஸ்மெட்டிக், நைகா உள்ளிட்ட நிறுவனங்கள் பெருமளவில் இந்த பிரிவில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.
அண்மையில் தான் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் ஜெய்பூரை அடிப்படையாகக் கொண்ட மினிமலிஸ்ட் என்ற அழகு சாதன பொருட்கள் பிராண்டை கையகப்படுத்தியது. எனவே இனிவரும் நாட்களில் இந்தியாவில் அழகு சாதன பொருட்கள் விற்பனை சந்தையில் மிகப்பெரிய போட்டியையும் புதிய புதிய பொருட்களும் பொருட்களும் விற்பனைக்கு வரும் என்பதை நாம் மறுக்க முடியாது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications