ஆதித்யா பிர்லா குழுமத்தின் பெயரையும் புகழையும் காப்பாற்றிக் கொண்டு இருக்கும் முக்கிய நிறுவனங்களில் ஒன்று அல்ட்ரா டெக் சிமெண்ட். இந்த அல்ட்ரா டெக் சிமெண்ட் கம்பெனியின் செப்டம்பர் 2020 காலாண்டு முடிவுகள் நேற்று வெளியானது.

உலகின் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களில் அல்ட்ரா டெக் சிமெண்ட் கம்பெனியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் சிமெண்ட், வொயிட் சிமெண்ட், பட்டி என பல பொருட்களைத் தயாரிக்கிறார்கள்.
இந்த பெரு நிறுவனத்தின் நிகர லாபம், இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் 1,234 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறதாம். கடந்த செப்டம்பர் 2019 கலாண்டில், அல்ட்ராடெக் சிமெண்ட் கம்பெனியின் நிகர லாபம் 579 கோடி ரூபாயாக இருந்தது. ஆக தற்போது 113 சதவிகிதம் அல்ட்ரா டெக் சிமெண்ட் கம்பெனியின் நிகர லாபம் அதிகரித்து இருக்கிறது.
அல்ட்ரா டெக் சிமெண்ட் கம்பெனியின் விற்பனை, இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் 10,231 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறதாம். இது கடந்த செப்டம்பர் 2019 காலாண்டை விட 7.8 சதவிகிதம் அதிகம்.
அல்ட்ரா டெக் சிமெண்ட் கம்பெனியின் செயல்பாட்டு வரம்பு 27 சதவிகிதமாக இருக்கிறதாம். இதற்கு இழுத்துப் பிடித்த செலவீனங்கள் மற்றும் வருவாய் அதிகரிப்பு என இரண்டுமே முக்கிய காரணம் என்கிறார்கள்.
குறிப்பாக, அல்ட்ரா டெக் சிமெண்ட் தன் நிகர கடன்களை, இந்த செப்டம்பர் 2020 காலாண்டிலும் கணிசமாக குறைத்து இருக்கிறார்களாம். 2020 - 21 நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல் 2020 - செப்டம்பர் 2020) 4,728 கோடி ரூபாய் கடன்களைக் குறைத்து இருக்கிறார்களாம்.
கடந்த ஜூன் 2020 காலாண்டில் மட்டும் 2,209 கோடி ரூபாய் கடனை குறைத்து இருக்கிறார்கள் என்பதும் நினைவு கூறத்தக்கது.
அல்ட்ரா டெக் சிமெண்ட் கம்பெனி, தன்னுடைய ஒடிஸா, பீகார், மேற்கு வங்கத்தில் சிமெண்ட் ஆலை பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறது. வரும் 2021 - 2022 நிதி ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரலாம் எனவும் சொல்லி இருக்கிறது கம்பெனி தரப்பு.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications