தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிவையில் அனைத்து கட்சிகளும், தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமாக இருக்கும் நிலையில் ஒவ்வொரகு கட்சிகளாக 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக (ADMK) தனது தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மூன்று கட்டங்களாக அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், மார்ச் 24ஆம் தேதி மேலும் பல புதிய திட்டங்களுடன் மொத்தம் 297 வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வாக்குறுதிகள் பெரும்பாலும் சமானிய மக்களை கவரும் வகையில் அமைந்திருப்பதால் மக்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

குடும்பங்களுக்கு நேரடி நிதி மற்றும் இலவச நலத்திட்டங்கள்
அதிமுக கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் மிகவும் முக்கியமாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பெண்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திர ரூ.1,000 உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வழங்கப்படும். மேலும், குடும்ப தலைவிகளுக்கு இலவச ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு கவனம் ஈர்த்துள்ளது.
போக்குவரத்து மற்றும் வாழ்வாதார ஆதரவு
நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச பயண சலுகையை விரிவுபடுத்தி, ஆண்களுக்கும் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாழ்வாதார ஆதரவாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 சிலிண்டர்கள் வழங்கப்படும். வீடு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு சலுகைகள்
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள 12ஆம் வகுப்பு முடித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.
மேலும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும், இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சமூக நலத் திட்டங்கள்
பெண்கள் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.25,000 மானியம் வழங்கப்படும். இதன் மூலம் 5 லட்சம் பேருக்கு "அம்மா இருசக்கர வாகனம்" திட்டம் செயல்படுத்தப்படும்.
முதியோருக்கான உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும். மேலும், அரசு நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயம், கல்வி மற்றும் பிற அறிவிப்புகள்
கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 10% அதிகரிக்கப்படும்.
மேலும், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க சட்டம் இயற்றப்படும் எனவும், செவிலியர்கள் பணி நிரந்தரம், மீனவர்கள் உயிரிழப்பிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு போன்ற பல சமூக நல அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்தல் சூழல் மற்றும் கூட்டணி நிலை
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி விரைவில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.
அதிமுக வெளியிட்டுள்ள 297 வாக்குறுதிகள் குடும்ப நலன், பெண்கள் முன்னேற்றம், இளைஞர் வேலைவாய்ப்பு பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த அறிவிப்புகள் வாக்காளர்களிடம் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தும் என்பது வரும் தேர்தல் முடிவில் தெரியவரும்.
More From GoodReturns

தேர்தலுக்கு அடுத்த நாள் வெளியாகிறதா ஜனநாயகன் படம்? விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்?

தவெக தலைவர் விஜய்- கிட்ட காஸ்ட்லி சைக்கிள், கார் மட்டுமில்ல இந்த ஒரு ஸ்பெஷல் வண்டியும் இருக்கு தெரியுமா?

தவெக தலைவர் விஜய்-இன் பிரமாண பத்திரத்துல இந்த ரூ.100 கோடி விஷயத்த கவனிச்சீங்களா மக்களே..!!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக நடக்கும் வாக்குபதிவு!! வாக்காளர்களை வரவேற்கும் ரோபோ!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?



Click it and Unblock the Notifications