அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் சாப்ட்வேர் நிறுவனமான அடோப் முதல் முறையாக இந்தியாவில் ஒரு நிறுவனத்தை வாங்கியுள்ளது. அடோப் நிறுவனத்தின் தலையெழுத்தை தலைகீழாக மாற்றியுள்ள சாந்தனு நாராயன் பல பெரிய நிறுவனங்களைப் பெரும் தொகை கொடுத்து வாங்கியிருந்தாலும், இதுவரையில் ஒரு இந்திய நிறுவனத்தைக் கூட வாங்கவில்லை.
கிரியேட்டிவ் துறையில் நாளுக்கு நாள் ஏஐ தலையீடு அதிகரித்து வரும் வேளையில் இதை உணர்ந்த அடோப் நிறுவனத்தின் தலைவர் சாந்தனு நாராயன், தனது நிறுவனத்தின் அனைத்து சேவைகளிலும் ஏஐ பயன்பாட்டைக் கொண்டு வந்துள்ளார். இது அடோபி சேவைகளைப் பயன்படுத்தும் மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியதுள்ளது.

இந்த நிலையில் ஏஐ துறையில் அடுத்தகட்ட வளர்ச்சி பாதைக்கு அடித்தளமிடும் வகையில் சாந்தனு நாராயன் தலைமையிலான அடோப் நிறுவனம் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இயங்கும் வீடியோ உருவாக்கும் தளமான Rephrase.ai நிறுவனத்தை மொத்தமாக வாங்கியுள்ளது.
அடோப் நிறுவனத்தின் சிஇஓ-வாக 2007 முதல் சாந்தனு நாராயன் இருந்தாலும், இப்போது தான் முதல் முறையாக இந்தியாவில் ஒரு நிறுவனம் வாங்கப்பட்டு உள்ளது. மேலும் இதுதான் அடோப் நிறுவனத்தின் முதல் ஏஐ ஜெனரேட்டிவ் ஸ்டார்ட்அப் கைப்பற்றலாகும்.
அடோப் நிறுவனம் Rephrase.ai நிறுவனத்தை மொத்தமாக வாங்கியது மூலம் அனைத்து நிறுவனங்களும் அடோப்-ல் சேர உள்ளனர். Rephrase.ai நிறுவனம் ஜெனரேட்டிவ் ஏஐ வீடியோ மற்றும் ஆடியோ தொழில்நுட்ப நிறுவனம், இது டெக்ஸ்ட் டூ வீடியோ ஜெனரேட்டர் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இது அடோப் வாடிக்கையாளர்களுக்குப் பெரிய அளவிலான பலன்களைக் கொடுக்கக் கூடியது மட்டும் அல்லாமல் பல வேலைகளை எளிதாக முடிக்கக் கூடிய பவரை அளிக்கும்.
அடோப் நிறுவனம், Rephrase.ai நிறுவனத்தை மொத்தமாக வாங்கியது அதன் முதலீட்டாளர்களுக்குப் பணமாகக் கொடுத்துச் செட்டில் செய்யவும், நிறுவனர்களுக்குப் பணம் மற்றும் பங்குகள் வாயிலாகச் செட்டில் செய்ய உள்ளது.

ஆஷ்ரே மல்ஹோத்ரா, நிஷீத் லஹோட்டி மற்றும் சிவம் மங்லா ஆகியோரால் துவங்கப்பட்ட இந்த ஸ்டார்ட்அப், இன்று வரை 13.9 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியுள்ளது. கடந்த ஆண்டுச் செப்டம்பர் மாதம் ரெட் வென்ச்சர்ஸ் தலைமையிலான முதலீட்டுச் சுற்றில் 10.6 மில்லியன் டாலரை திரட்டியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications