டெக் துறையில் ஏஐ ஆதிக்கம் எந்த அளவுக்கு ஆடிப்படைக்கிறது என்பதற்கு இந்த ஒரு விஷயம் போதும், ஆம் அடோப் நிறுவனத்தின் நீண்டகால CEO ஆக இருந்து வந்த சாந்தனு நாராயண் தனது பதவியிலிருந்து விலகுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக புதிய CEO நியமிக்கப்பட்டதும் அவர் விலகுவார் என்று நிறுவனம் வியாழனன்று (மார்ச் 12, 2026) அறிவித்தது.
அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் சாப்ட்வேர் துவங்கி பல சேவைகள் டிசைன் துறையில் முக்கிய அங்கமாக இருந்து வந்தது. ஆனால் AI தொழில்நுட்பம் அடோப் நிறுவனத்தின் பல ஆண்டு கால உழைப்பை சில மாதங்களில் தவிடுபொடியாக்கியுள்ளது.

டிசைன் துறையில் AI தொழில்நுட்பத்தின் மூலம் பல புதிய போட்டியாளர்களை உருவாக்கியுள்ளது. இந்த போட்டியை சமாளிக்க அடோப் தனது AI உத்தியை தீவிரப்படுத்தி வருகிறது. இது மட்டும் அல்லாமல் இத்துறையில் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு கூட்டாண்மைகள் மற்றும் போட்டி நிறுவனத்தை வாங்கி அதை தனது சேவை தளத்துடன் இணைப்பது வரையில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
அடோப் நிறுவனத்தின் லாபம், வருவாய் அனைத்தும் வளர்ச்சி பாதையில் இருக்கும் வேளையிலும் ஏஐ தொழில்நுட்பம் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வருவாய்க்கும் வில்லனாகவே இருந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் சாந்தனு நாராயண் வெளியேற்றம் இந்நிறுவனத்திற்கு பெரும் சிக்கலை உருவாக்கும். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே முதலீட்டாளர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் அடோப் பங்கு விலை 7 சதவீதத்துக்கும் மேல் சரிந்தது. அடோப் நிறுவனத்தின் பங்கு விலை இந்த ஆண்டு 22 சதவீதம் சரிந்துள்ளது. 2025-ல் 21 சதவீதம் வீழ்ச்சி கண்டது. AI தொழில்நுட்பம் மூலம் இந்நிறுவனத்தின் எதிர்காலம் கேள்வியாகியிருப்பது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது. கிட்டத்தட்ட கடந்த 15 மாதத்தில் 43 சதவீத சரிவை அடோப் பங்குகள் எதிர்கொண்டு உள்ளது.
இந்த பங்கு மதிப்பு சரிவு உயர்மட்ட நிர்வாகத்தில் பிரச்சனையை உருவாக்கியிருக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் அடோப் நிறுவன தரப்பில் விளக்கம் கொடுக்கவில்லை. சுமார் 18 ஆண்டுகளாக நிறுவனத்தை வழிநடத்திய சாந்தனு நாராயண், இந்திய வம்சாவளியை சேர்ந்த சிஇஓ-க்களில் முதன்மையானவர். இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்.
சாந்தனு நாராயண் தனது பதவியில் இருந்து விலகிய பிறகும் இந்நிறுவனத்தின் தலைவராக தொடர்ந்து இருப்பார் என்று அடோப் தெரிவித்துள்ளது. புதிய CEO-வுக்கு முழு ஆதரவையும் சாந்தனு நாராயண் அளிப்பார்.


Click it and Unblock the Notifications