அடோப் நிறுவனத்தின் நீண்டகால CEO ஆக இருந்து வந்த சாந்தனு நாராயண் தனது பதவியிலிருந்து விலகுவதாக இந்நிறுவனம் மார்ச் மாதம் தெரிவித்தது. டிசைன் துறையில் AI தொழில்நுட்பத்தின் உதவி மூலம் பல புதிய போட்டியாளர்களை உருவாக்கியுள்ளது. இந்த போட்டியை சமாளிக்க அடோப் தனது AI உத்தியை தீவிரப்படுத்தி வரும் வேளையில், சாந்தனு நாராயண் வெளியேறுவது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
சுமார் 6 மாத ஆலோசனை, ஆய்வுக்கு பின்பு அடோப் நிர்வாகம் அனில் சக்ரவர்த்தி-ஐ புதிய சிஇஓ-வாக தேர்வு செய்துள்ளது. சுமார் 18 ஆண்டுகளாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சாந்தனு நாராயண் சிஇஓ ஆக அடோப் நிறுவனத்தை வழிநடத்திய நிலையில், மீண்டும் இந்திய வம்சாவளி தலைவரின் கைக்கு வருகிறது Adobe. யார் இந்த அனில் சக்ரவர்த்தி..?

ஐஐடி வாரணாசி-யில் கம்பியூட்டர் சையின்ஸ் பிரிவில் இன்ஜினியரிங் பட்டமும், அமெரிக்காவின் MIT கல்லூரியில் பிஹெச்டி பட்டமும் பெற்ற அனில் சக்ரவர்த்தி மெகென்டி அண்ட் கோ, வெரிசைன், சிமான்டெர், இன்பார்மடிகா போன்ற நிறுவனங்களில் முக்கிய மற்றும் உயர் பதவிகளில் பணியாற்றிய பின்பு 2020ல் அடோப் நிறுவனத்தில் டிஜிட்டல் எக்ஸ்பீரியன்ஸ் பிரிவை வழிநடத்தும் பொறுப்பில் சேர்ந்தார். இதை தொடர்ந்து குளோபல் சேல்ஸ் மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவை தலைமையேற்று நடந்தினார்.
சாந்தனு நாராயண் பதவி விலகுவதாக அறிவித்த பின்பு ஜூன் மாதம் இந்நிறுவனத்தின் நிதியியல் பிரிவு தலைவரான டேன் டாரன்-ம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் அடோப் நிறுவனத்திற்கான சிஇஓ தேர்வு வாய்ப்புகள் பெரியளவில் குறைந்துள்ளது.
இதேவேளையில் அடோப் டிசைன் துறையில் தனது ஆதிக்கத்தை பிக்மா, கான்வா போன்ற தளத்திடம் இழந்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் வந்த பின்பு பெரும்பாலான டிசைன் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் போட்டோஷாப், Illustrator, Premiere Pro, InDesign போன்ற அடோப் நிறுவனத்தின் தேவை குறைந்து வருகிறது.
இதேவேளையில் அடோப்-ன் போட்டி நிறுவனமான பிக்மா, கான்வா போன்றவை அதிகளவிலான ஏஐ சேவைகளை இணைத்துள்ளதால் கூடுதல் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஏஐ தொழில்நுட்பத்தால் சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களுக்கு இணையாக போட்டிப்போட துவங்கியுள்ளது.
இந்த நெருக்கடியை பிரதிபலிக்கும் வகையில் அடோப் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 18 சதவீதமும், 2025ஆம் ஆண்டில் 21 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. கடந்த 5 வருடத்தில் அதாவது ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் வந்த பின்பு சுமார் 57.13 சதவீதம் வரையில் அடோப் பங்கு விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications