இன்னும் 5 வருஷம் தான்!! எல்லாமே மாறப் போகுது!! AI தொழில்நுட்பத்தை குறைத்து மதிப்பிடாதீங்க!!

இப்பொழுது உலகம் முழுவதுமே எங்கு பார்த்தாலும் யாரிடம் பேசினாலும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து தான் தற்போது பரபரப்பாக பேசுகிறார்கள் . அந்த அளவிற்கு குறுகிய காலத்திலேயே நம்முடைய பல்வேறு வேலைகளையும் ஏஐ தொழில்நுட்பம் கையில் எடுத்துக் கொண்டு விட்டது.

மனிதர்களிடம் இருக்கும் பெரும்பாலான ஒயிட் கலர் வேலைகளை ஏஐ தொழில்நுட்பமே பறித்துக் கொள்ளும் என தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு கணினி அறிவியல் பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல் பேரதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

இன்னும் 5 வருஷம் தான்!! எல்லாமே மாறப் போகுது!! AI தொழில்நுட்பத்தை குறைத்து மதிப்பிடாதீங்க!!

ரோமன் யாம்போல்ஸ்கி (Roman Yampolskiy) என்பவர் அமெரிக்காவின் லூஸ்வில்லே பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பிரிவு பேராசிரியராக பணியாற்றி வருபவர். இவர் அண்மையில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் நம்மை அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது.

உலகம் முழுவதுமே நவீன ஏஐ தொழில்நுட்பம் 99 சதவீத வேலைகளை பறித்துக் கொள்ளும் எனக் கூறியிருக்கிறார்.அதாவது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதும் 99% மக்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் போய்விடுவார்கள் என அவர் தெரிவிக்கிறார் . ஒவ்வொரு நொடியும் ஏஐ தொழில்நுட்பம் தன்னை மேம்படுத்தி வருகிறது இது மனிதர்களுக்கும் மனிதர்களுக்கான வேலைகளுக்கும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறது என கூறியிருக்கிறார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பேசி வருபவர் தான் இவர். இது குறித்து பல்வேறு புத்தகங்களையும் அவர் எழுதியிருக்கிறார். ஆர்டிஃபிசியல் ஜெனரல் இன்டெலிஜென்ஸ் சிஸ்டம்ஸ் மனிதர்களுக்கு நிகரான திறன் கொண்டவையாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன எனக் கூறும் அவர் 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த செயற்கை நுண்ணறிவு நுட்பம் மனிதர்களுக்கு நிகரான திறன் கொண்டதாக மாறிவிடும் எனக் கூறியிருக்கிறார் .

அடுத்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை நாம் காண போகிறோம் என கூறும் அவர் ஏராளமான மக்கள் வேலை இழக்க போகிறார்கள் என்று எச்சரிக்கையும் முன் வைத்திருக்கிறார். 20 டாலருக்கு ஒரு ஏஐ கருவியை வாங்கி பத்து மனிதர்கள் செய்யக்கூடிய வேலையை உங்களால் செய்ய முடியும் என்றால் நீங்கள் மனிதர்களை பணிக்கு அமர்த்துவீர்களா இல்லை அந்த கருவியை வாங்குவீர்களா என்ற கேள்வியை அவர் முன் வைத்திருக்கிறார்.

மேலும் கோடிங், பிராம்ப்ட் இன்ஜினியரிங் போன்ற வேலைகளுக்கு கூட நிச்சயம் கிடையாது என அவர் தெரிவிக்கிறார். ஏஐ தொழில்நுட்பங்கள் மனிதர்களை விட சிறப்பாக பிராம்ப்ட்களை உருவாக்கும் திறன் கொண்டவையாக உருவெடுத்து விட்டன என குறிப்பிடும் அவர் கணினி சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளுமே ஆர்டிபிசியல் ஜெனரல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்திடம் சென்று விடும் மனிதர்கள் நேரடியாக சென்று செய்யக்கூடிய வேலைகள் அனைத்துமே மனிதவடிவிலான ரோபோக்களிடம் சென்று விடும் இன்னும் ஐந்து ஆண்டுகள் தான் என அவர் ஆருடம் தெரிவிக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+