இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சேவைகளில் இருக்கும் பல்வேறு தடைகளை நீக்க வேண்டும் எனத் திட்டமிட்டு மத்திய அடுத்தடுத்து பல மாற்றங்களைச் செய்து வருகிறது.
இதன் படி தற்போது பெரு தொகைகளை நெட்பேங்கிங் வாயிலாகப் பரிமாற்றம் செய்யப் பயன்படுத்தும் ஆர்டிஜிஎஸ் சேவை 24 மணிநேரமும் இயங்க வழிவகைச் செய்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் வாரத்தில் 5 நாட்கள் அதாவது திங்கள் முதல் வெள்ளி வரையிலான வேலை நாட்களில் மட்டுமே இந்தச் சேவை பயன்படுத்த முடியும். அதுவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலான கால வரையறைக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஆனால் இப்போது வாரத்தில் 7 நாட்களும், 24 மணிநேரமும் பயன்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த ஆர்டிஜிஎஸ் சேவையும், புதிய மாற்றத்தாலும் என்ன நன்மை.
வங்கிகள் இடையிலான பரிமாற்றம்
ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் என்பதைத் தாம் நாம் ஆர்டிஜிஎஸ் சுருக்கமாக அழைக்கிறோம். பொதுவாக இந்தச் சேவை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு இடையில் செய்யும் பணப் பரிமாற்றத்திற்கு, உதாரணமாக எஸ்பிஐ வங்கியில் இருந்து ஐசிஐசிஐ வங்கிக்குப் பணம் பரிமாற்றம் செய்யப்படும் போதும் பயன்படுத்தும் ஒரு சேவை.
இப்படி ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்குப் பணம் அனுப்பியதும், உடனே மறுமுனையில் இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தைப் பெற முடியும்.
அளவீடு
யூபிஐ செயலியில் கூட உடனடியாகப் பணத்தைப் பெற முடியும், ஆனால் பரிமாற்றத்திற்கு ஒரு நாளுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவீடு உண்டு.
ஆனால் இந்த ஆர்டிஜிஎஸ் சேவையின் கீழ் 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பரிமாற்றம் செய்யலாம். எவ்விதமான தங்கு தடையுமின்றிப் பணத்தை அனுப்பவோ பெறவோ முடியும்.
கூடுதல் கட்டணம் இல்லை
பணப் பரிமாற்றத்தின் அளவீடு அதிகமாக இருக்கும் இந்தச் சேவைக்கு எவ்விதமான கட்டணமும் இல்லை என்பது கூடுதல் சிறப்பு.
இதனால் மக்கள் தங்களது நெட்பேங்கிங் சேவையின் கீழ் இந்த ஆர்டிஜிஎஸ் சேவையை ஜீரோ கட்டணத்தில் பயன்படுத்த முடியும்.
24 மணிநேரமும்
இந்தச் சிறப்பான சேவை எவ்விதமான கட்டுப்பாடும், தடையுமின்றி 24 மணிநேரமும் கிடைக்கும் என்பதால் வர்த்தகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக வர்த்தகர்கள் மத்தியில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்த 24 மணிநேர சேவைக்குக் கூடுதல் வரவேற்பு கிடைத்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications