தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான உணவகக் கடைகளில் ஒன்றான அடையார் ஆனந்த பவன் (A2B) அடுத்த 5 வருடத்தில் இந்தியாவில் 400 முதல் 500 கடைகளை திறக்கவும், ஐபிஓ வெளியிடும் முக்கியமான இலக்குடன் முதலீட்டு சந்தையில் களமிறங்கியுள்ளது. இந்த முயற்சியின் மூலம் இந்திய முதலீட்டுச் சந்தையில் அடையார் ஆனந்த பவன் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.
இந்த விரிவாக்க பணிகளுக்காக நிதியைத் திரட்டவும், வர்த்தக நிர்வாகத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு நிகராக மெருகேற்றவும் அடையார் ஆனந்த பவன் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனத்திடம் இருந்து ரூ.1000 முதல் ரூ.1200 கோடி வரை நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அடையார் ஆனந்த பவன் நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் திருப்பதி ராஜா அவர்களின் குடும்பம் சுமார் 35 சதவீத பங்குகளில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

அடையார் ஆனந்த பவன் உருவானது எப்படித் தெரியுமா..?
சென்னையைச் சேர்ந்த கே.டி. சீனிவாசா ராஜா மற்றும் அவரது சகோதரர் கே.டி. வெங்கடேசன் ஆகியோர் தான் தற்போது A2B ஐ நிர்வகித்து வருகின்றனர். இவர்கள் நிறுவனர் கே.எஸ். திருப்பதி ராஜாவின் மகன்கள் ஆவார்கள்.
அடையார் ஆனந்த பவன் கதை சென்னையில் துவங்கவில்லை, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து துவங்குகிறது. கே.எஸ். திருப்பதி ராஜா தான் இன்றைய A2B-க்கான அடித்தளம் அமைத்தார். திருப்பதி ராஜா 1960 களில் ராஜபாளையத்தில் குரு ஸ்வீட்ஸ் என்ற இனிப்பு மற்றும் பலகார கடையைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
இதன் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, 1978 ஆம் ஆண்டு பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் ஸ்ரீனிவாச ஸ்வீட்ஸ் என்ற இன்னொரு கடையைத் தொடங்கினார். இதில் கிடைத்த வெற்றி மற்றும் அனுபவத்தை வைத்து தலைநகர் சென்னையில் 1979 ஆம் ஆண்டு ராயபுரம் அருகில் வண்ணாரப்பேட்டை-யில் முதல் இனிப்பு மற்றும் பலகார கடையைத் தொடங்கினார்.
சென்னையில் துவங்கிய கடை தான் இன்று 3500 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக சாம்ராஜ்ஜியம் உருவாக வலிமையான அடித்தளம் அமைத்துக்கொடுத்தது. 1979 ஆம் ஆண்டு சென்னையில் வண்ணாரப்பேட்டையில் "ஸ்ரீ ஆனந்த பவன்" என்ற பெயரில் தான் இனிப்பு மற்றும் பலகார கடை தொடங்கினர். ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததால், அடையாரில் இரண்டாவது கடையைத் திறந்து, அதன் பெயரை "அடையார் ஆனந்த பவன்" என மாற்றினார்கள்.
இதை சென்டிமென்ட் ஆக திருப்பதி ராஜா குடும்பம் நம்பியதால் சென்னையில் அடுத்தடுத்து திறக்கப்பட்ட அனைத்து கடைகளுக்கும் அடையார் ஆனந்த பவன் என பெயரிடப்பட்டது. 1960 முதல் 2004 வரையில் அடையார் ஆனந்த பவன் வெறும் இனிப்பு மற்றும் பலகார கடை மட்டும் தான்.
2005 ஆம் ஆண்டில் தான் அடையார் ஆனந்த பவன் உணவகத் துறைக்குள் நுழைந்து இன்று வருடத்திற்கு ரூ.1500 கோடி வருவாய் ஈட்டும் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியமாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனத்தில் தற்போது 14,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், இவர்கள் தயாரிக்கும் பாக்கெட் ஸ்நாக்ஸ்களில் இருந்து சுமார் ரூ.150 கோடி வருவாய் ஈட்டுகின்றனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் A2B நிறுவனத்தின் முதன்மை போட்டியாளர் என்றால் சரவண பவன், அன்னபூர்ணா மற்றும் சங்கீதா போன்ற ஹோட்டல்கள் தான். சரவண பவன் நிறுவனம் இந்தியாவில் 30 கிளைகளையும், 25 நாடுகளில் 81 கிளைகளையும் கொண்டுள்ளது. அதேபோல், சென்னையின் பிரபலமான சங்கீதா ஹோட்டல்ஸ் சென்னையில் 30 க்கும் மேற்பட்ட கிளைகளையும், வெளிநாடுகளில் 21 கிளைகளையும் கொண்டுள்ளது. கடைசியாக கோயம்புத்தூரின் அடையாளமாகத் திகழும் ஸ்ரீ ஆன்னப்பூர்ணா உணவகம் 19 கிளைகளைக் கொண்டுள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications