கைமாறுகிறது அடையார் ஆனந்த பவன் நிறுவனம்..!! ரூ.1,690 கோடிக்கு விற்பனை..!!

சென்னையை தலைமையிடமாக கொண்ட உலக புகழ்பெற்ற தென்னிந்திய உணவகம் அடையார் ஆனந்த பவன் (Adyar Ananda Bhavan). இதனை சுருக்கமாக A2B என்று அழைக்கின்றனர். தென்னிந்திய உணவுகளையும் பலகாரங்களையும் தனித்த ருசியில் வழங்கி மக்களிடம் பெயர் பெற்ற நிறுவனம் இது.

அடையார் ஆனந்த பவன் உணவு என்றாலே தரமாகவும் ருசியாகவும் இருக்கும் என மக்கள் மனதில் பதிந்துள்ளது. 1970களில் தொடங்கப்பட்டு தற்போது 160க்கும் அதிகமான இடங்களில் உணவகங்களை நடத்தி வருகிறது. சைவ உணவுக்கு பெயர் போன அடையார் ஆனந்த பவன் நிறுவனம் தற்போது வேறு நிறுவனத்திற்கு கைமாறுகிறது.

கைமாறுகிறது அடையார் ஆனந்த பவன் நிறுவனம்..!! ரூ.1,690 கோடிக்கு விற்பனை..!!

ஜேம்ஸ் மர்டாக் மற்றும் உதய்சங்கர் ஆகியோருக்கு சொந்தமான போதி ட்ரீ சிஸ்டம்ஸ் (Bodhi Tree Systems) முதலீட்டு நிறுவனம், அடையார் ஆனந்த பவன் நிறுவனத்தை கையில் எடுக்கிறது. அதாவது 180 மில்லியன் டாலர் , இந்திய மதிப்பில் 1690 கோடி ரூபாக்கு அடையார் ஆனந்த பவனின் பெரும்பான்மையான பங்குகளை போதி ட்ரீ நிறுவனம் விலை கொடுத்து வாங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, போதி ட்ரீ சிஸ்டம்ஸின் இணை நிறுவனரான உதய்சங்கர், A2B நிறுவனத்தின் புதிய இயக்குநர்கள் குழுவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். அடையார் ஆனந்த பவனின் கிளைகளை வட மாநிலங்களிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் விரிவாக்கம் செய்ய போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனம் இந்தியாவில் செய்யும் மூன்றாவது பெரிய முதலீடு இதுவாகும். இதற்கு முன்பு கல்வி நிறுவனமான அல்லன் கரியர் இன்ஸ்டிடியூட் மற்றும் ஜியோஸ்டார் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளது.

Also Read

1970களில் திருப்பதி ராஜா அவர்களால் ஒரு சிறிய பலகாரக் கடையாக இது தொடங்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனம் கே.டி.வெங்கடேசன் மற்றும் கே.டி.ஸ்ரீனிவாச ராஜ் ஆகியோரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இந்தியா முழுவதும் சுமார் 160 கிளைகளையும், வெளிநாடுகளில் 30க்கும் மேற்பட்ட கிளைகளையும் கொண்டு பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

பாரம்பரியமான தென்னிந்திய உணவுகளின் சுவையை உலகளாவிய பல நாடுகளுக்கு கொண்டு செல்வது மற்றும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கிளைகளை விரிவுபடுத்துவது. இந்நிறுவனத்தை ஒரு தொழில்முறை நிறுவனமாக மாற்றி, எதிர்காலத்தில் பங்கு சந்தையில் பட்டியலிடுவதற்கான ஏற்பாடுகளை செய்வது. சமையல் கூடங்களை உலகளாவிய தரத்திற்கு நவீனப்படுத்துவது, உற்பத்தி திறனை மேம்படுத்துவது மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளை வலுப்படுத்துவது ஆகியவையே தங்களின் இலக்கு என போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Recommended For You

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த நிறுவனம், இன்று லட்சக்கணக்கான குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. போதி ட்ரீ நிறுவனத்துடன் கைகோர்ப்பது எங்கள் நிறுவனத்திற்கு ஒரு புதிய மைல்கல்லாகும். இது எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை வழங்கும் என ஸ்ரீனிவாச ராஜா தெரிவித்துள்ளார்.

கே.டி. வெங்கடேசன் நுகர்வோர் வணிகங்களை செய்வதில் மிகப்பெரிய அனுபவம் கொண்ட ஜேம்ஸ் மர்டாக் மற்றும் உதய்சங்கர் ஆகியோரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இவர்களின் வழிகாட்டுதல் மூலம் எங்கள் நிறுவனத்திற்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+