ஓசூரை நோக்கி படையெடுக்கும் கர்நாடக நிறுவனங்கள்!! ரூ.4000 கோடி முதலீட்டால் வாயடைத்து போன கர்நாடகா!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரம் தொழில்துறை ரீதியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு மேம்படுத்தி வருகிறது. எனவே பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தற்போது ஓசூரில் முதலீடு செய்வதற்கு முன் வந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் கர்நாடக மாநில நிறுவனங்கள் கூட ஓசூரை தேடி வந்து முதலீடு செய்கின்றன. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏக்வஸ் குழுமம் தமிழ்நாடு அரசோடு 4000 கோடி ரூபாய்க்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஓசூரில் சுமார் 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய ஒரு ஆலையை இந்த நிறுவனம் அமைக்க இருக்கிறது.

ஓசூரை நோக்கி படையெடுக்கும் கர்நாடக நிறுவனங்கள்!! ரூ.4000 கோடி முதலீட்டால் வாயடைத்து போன கர்நாடகா!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் சூளகிரி தொழில் பூங்காவில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்திக்கான தொகுப்பு அமைப்பதற்கும், விமான இயந்திரங்கள் , கியர் பாக்ஸ் உபபாகங்கள் உற்பத்தி மேற்கொள்வதற்கும் ஏக்வஸ் குழுமம் தமிழ்நாடு அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறது. முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் சூளகிரி சிப்காட் தொழில் பூங்காவில் விமான இயந்திர உப பாகங்கள் மற்றும் துல்லிய பொறியியல் தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தொழில் பூங்கா விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான உற்பத்தி தொழில் பூங்காவாக மாற இருக்கிறது.

ஓசூரை நோக்கி படையெடுக்கும் கர்நாடக நிறுவனங்கள்!! ரூ.4000 கோடி முதலீட்டால் வாயடைத்து போன கர்நாடகா!!

ஓசூரில் டாடா நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. டிவிஎஸ், ஏதர் மற்றும் ஓலா நிறுவனங்களின் வாகன உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இது தவிர 3000க்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஓசூர் நகரத்தின் இந்த வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அறிவுசார் வழித்தடம், வர்த்தக மையம் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது.

மற்றொருபுறம் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. இந்த சூழலில் இந்த சூழலில் தான் கர்நாடக நிறுவனமான ஏக்வஸின் 4000 கோடி ரூபாய் முதலீடு ஒட்டுமொத்தமாகவே ஓசூர் மற்றும் சுற்றுப்புறங்களில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 250 ஏக்கர் பரப்பளவிலான பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட ஆலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைய இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏக்வஸ் நிறுவனம் கர்நாடகாவை விடுத்து தமிழ்நாட்டில் வந்து முதலீடு செய்திருப்பது அந்த மாநிலத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிவிட்ட நிலையில் கர்நாடக மாநில தொழில்துறை அமைச்சர் எம். பி. பாட்டில் ஏக்வஸ் நிறுவனம் கர்நாடகாவிலும் தொடர்ந்து தங்களுடைய செயல்பாட்டை விரிவுபடுத்துவதற்கு உறுதிமொழி தந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

3000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது எனக் கூறியிருக்கும் அவர் இது தவிர மேலும் ஒரு 1500 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு இந்த நிறுவனம் உறுதிமொழி தந்திருக்கிறது என்றார். ஓசூரில் இந்த நிறுவனம் தங்களுடைய ஆலையை நிறுவ போவதாக ஏற்கனவே எங்களிடம் தெரிவித்துவிட்டது இதற்காக கர்நாடகாவில் இருந்து இந்த நிறுவனம் வெளியேறுகிறது என கூறி விட முடியாது என கூறியிருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+