பொதுவாக வேலைக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் வெளியூர்களுக்குச் சென்று வேலை செய்து அங்கேயே செட்டில் ஆக வேண்டும் என்று நினைப்பது வழக்கம்தான். அப்படிப் பார்க்கும்போது, மக்கள் விரும்பும் வகையில் ஒரு சில நகரங்கள் உள்ளன. அதில் ஒரு நகரம் தான் பெங்களூர். பெங்களூரைப் பொறுத்தவரை தங்களுக்குத் தேவைப்படும் அடிப்படை தேவை இருப்பதால் மக்கள் சிலர் அங்கேயே செட்டில் ஆக வேண்டும் என்று நினைக்கின்றனர். இருந்தாலும் ஒரு சில இடங்களில் செலவுகள் அதிகமாக உள்ளது.
குறிப்பாக, வீட்டு வாடகை பெங்களூரை பொறுத்தவரையில் சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும், ஒரு சில இடங்களில் ஒரு மாதத்திற்கு ரூ.30,000-க்கும் குறைவாக அடுக்குமாடி குடியிருப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஜேபி நகர், வடக்கு பெங்களூரின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் பிடிஎம் லே-அவுட் ஆகிய பகுதிகளில் வாடகை செலவுகள் பிற ஏரியாக்களைவிட குறைவாக உள்ளது.

சன்னசந்திரா மற்றும் காடு கோடி ஆகிய புறநகர்ப் பகுதிகளில் முன்னதாக 2 BHK அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை 1 வருடத்திற்கு முன்பு ரூ. 40,000-அக இருந்தது. ஆனால் இப்போது ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை குறைந்துள்ளதாக உள்ளூர் தரகர்கள் தெரிவித்துள்ளனர். மக்கள் பெரும்பாலும் வாடகைக்கு பிளாட் எடுக்க தேர்ந்தெடுக்கும் போது மெயின் ஏரியாக்களில் பார்ப்பதை விட, விலை குறைந்த வாடகையில் இருக்கின்ற புற இடங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர்.
தற்போது மெட்ரோ சேவையின் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் இந்திரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைத் தேடுபவர்கள் அதற்குப் பதிலாக பழைய மெட்ராஸ் சாலை மற்றும் கேஆர் புறத்தில் உள்ள வீடுகளைத் தேர்வு செய்யலாம்.
பெங்களூர் போன்ற பெருநகரங்களில் ஒரு மாதத்திற்கு ரூ.30,000 க்கு வாடகைக்கு ஒருவர் வீடு பார்க்கும் போது அதற்கு அட்வான்ஸ் தொகையாக குறைந்தபட்சம் ரூ.1,80,000 முதல் ரூ.2,70,000 வரை செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், தற்போது வீடுகள் அதிகமாக இருப்பதால் வீட்டு உரிமையாளர்கள் இந்த அட்வான்ஸ் தொகையைக் குறைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக உள்ளூர் தரகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு மாதத்திற்கு ரூ.30,000-க்கும் குறைவான வாடகை இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்புகளின் ஒரு சில பகுதிகளைப் பற்றி பார்ப்போம்.
கேஆர் புரம்: கே ஆர் புரம் அல்லது கிருஷ்ணராஜபுரம் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி பெங்களூரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒரு மாதத்திற்கு ரூ.30,000-க்கும் குறைவான விலையில் வாடகைக்குக் கிடைக்கின்றன. சமீபத்தில் கேஆர் புரம் மற்றும் ஒயிட்ஃபீல்ட் இடையே மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது. இதனால் இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பெங்களூரின் கிழக்குப் பகுதிக்கும், மற்ற பகுதிகளுக்கும் எளிதாகச் சென்று வருவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜேபி நகர்: ஜேபி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் புதன்னஹள்ளி போன்ற பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் மாதம் ரூ.30,000-க்கும் குறைவான விலையில் வீடுகள் வாடகைக்குக் கிடைக்கும் என்று உள்ளூர் தரகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விலைக் குறைவுக்குக் காரணம், ஜேபி நகர் 4-வது கட்டத்திலிருந்து கெம்பாபுரா வரை புதிய மெட்ரோ சேவை அமைக்கப்படவுள்ளது. இதனால் இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வீடுகளைத் தேடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இதன் வழியே மெட்ரோ சேவை வந்தால் இந்தப் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட்களின் விலை 10-20% ஆக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தப் பகுதியின் மதிப்பு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
நார்த் பெங்களூர்: யஸ்வந்தபூர், ஹென்னூர் ஆகிய பகுதிகளில் உள்ள 2 BHK வீடுகளை மாதம் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை வாடகைக்கு எடுக்க முடியும். இந்தப் பகுதிகளின் அருகில் சர்வதேச விமான நிலையம் இருப்பதால் மக்கள் வெளியூர்ப் பயணங்கள் செய்வதற்கு எளிதாக இருக்கும். மேலும், மன்யாதா, கிர்லோஸ்கர் தொழில்நுட்பப் பூங்காக்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப மையங்கள் இந்தப் பகுதிக்கு அருகில் இருப்பதால் அங்கே வசிக்கும் மக்கள் வேலை வாய்ப்புகளையும் எளிதில் பெற முடியும்.
கனகபுரா சாலைகள்: கனகபுரா சாலையில் உள்ள பகுதிகள் ரியல் எஸ்டேட் சந்தையில் ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள இடங்கள் மலிவாக இருப்பதால் இதில் குடியேற மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இது நகரத்திற்குத் தொலைவில் இருப்பதாலும், போக்குவரத்து வசதிகள் சற்று குறைவாக இருப்பதாலும் இதில் மக்கள் குடி பெயர்வதில் சில சவால்களும் இருக்கின்றன.
ஈஸ்ட் பெங்களூர்: ஈஸ்ட் பெங்களூரில் பாகலூர் போன்ற பகுதிகளில் 2-BHK குடியிருப்புகள் மாதம் ரூ. 20,000-க்கும் குறைவான விலையில் வாடகைக்கு கிடைக்கின்றன. மேலும், இந்தப் பகுதிகளில் தொழில்நுட்பப் பூங்காக்கள் அருகில் இருப்பதால் மக்களின் வேலை வாய்ப்புகளுக்கும் உதவியாக இருக்கின்றது. அது மட்டுமில்லாமல், பல பகுதிகளில் 1-BHK வீடுகளை மாதம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை வாடகைக்கு எடுக்க முடியும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications