பெங்களூரில் வீடு வேணுமா? ரூ.1 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் எங்கெங்கு சொத்துகள் உள்ளது?

சமீபகாலமாக மெட்ரோ நகரங்களில் ரியல் எஸ்டேட் விலைகள் விண்ணை எட்டி வருகின்றன. வெளியான தகவல்களின்படி தற்போது 5 முதல் 10 சதவீதம் வரை பெங்களூரில் வீட்டு விலைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐடி பார்க்குகளுக்கு அருகில் உள்ள இடங்கள் இந்த விலை அதிகரிப்பை கண்டுள்ளது. ஏனெனில் பெங்களூரு முக்கிய தொழில் மையமாக உள்ளது. கிராமப்புறங்களில் இருப்பவர்களும் தங்கள் தொழிலுக்காக இங்கு இடம் பெயர்கின்றனர். அப்படி இருக்கையில் இன்னும் சில பகுதிகளில் ரூ.1 கோடிக்கும் கீழ் வாங்கக்கூடிய சொத்துக்கள் உள்ளன. இந்த கட்டுரையில் அது குறித்த தகவல்களை பார்ப்போம்.

நைட் பிராங்க் இந்தியாவின் அறிக்கை கடந்த ஆண்டில் பெங்களூருவின் கிழக்கு பகுதியில் வீட்டு விலைகள் 18 முதல் 20 சதவீதம் உயர்ந்ததாகவும், வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வீட்டு விலைகள் 10 முதல் 15 சதவீதம் அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளது. HSR லேஅவுட், கோரமங்கலா மற்றும் இந்திராநகர் போன்ற நகர மையப் பகுதிகள், அதிகரித்து வரும் நிலச் செலவுகள் காரணமாக மக்களால் வாங்க முடியாதவையாக உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

 பெங்களூரில் வீடு வேணுமா? ரூ.1 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் எங்கெங்கு சொத்துகள் உள்ளது?

பெங்களூருவில் ரூ.1 கோடிக்கு கீழ் வீடுகளை வாங்க முடியுமா?: ரூ.1 கோடிக்குள் வீடு வாங்க வேண்டும் என்றால் அதற்கு 1000 முதல் 1200 சதுர அடி வரையிலான குடியிருப்புகளின் விலை ஒரு சதுர அடிக்கு ரூ.6,000 முதல் ரூ.8,000 என்ற பட்ஜெட்டில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் ஓரளவு ரூ.1 கோடிக்குள் ஒரு குடியிருப்பை வாங்கி விடலாம்.

நைட் ஃபிராங்கின் கூற்றுப்படி, பிரிகேட் சாலைக்கு அருகில் அமைந்துள்ள லாங்ஃபோர்டு டவுன் மற்றும் லாவெல் சாலை போன்ற பகுதிகள் சதுர அடிக்கு ரூ. 15,000 முதல் ரூ.30,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் அவை ரூ.1 கோடி பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகாது.

ஆனால் காக்ஸ் டவுன், குக் டவுன், லிங்கராஜபுரம் மற்றும் ஃப்ரேசர் டவுன் போன்ற பகுதிகளில் ரூ.1 கோடிக்கு கீழ் விற்பனைக்குக் கிடைக்கும். இங்கு புதிய சிறிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன என்று ரியாலிட்டி கார்ப்ஸின் இயக்குனர் சுனில் சிங் கூறியுள்ளார். ஆனால் அப்படியே இங்கு வீடு வாங்கினாலும் அவை 1,000 சதுர அடி பரப்பளவில் தான் இருக்கும் என்றும் சுனில் சிங் கூறியுள்ளார்.

பெங்களூரில் ரூ.1 கோடிக்கு கீழ் விற்கப்படும் அடுக்குமாடி குடியிருப்பைக் கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று ரியல் எஸ்டேட் தரகர்கள் கூறுகின்றனர். இருப்பினும், 15-20 ஆண்டுகள் பழமையான அடுக்குமாடி குடியிருப்புகள் மறுவிற்பனைக்கு உள்ளன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

நைட் ஃபிராங்கின் கூற்றுப்படி, வடக்கு பெங்களூரு வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதியாக உள்ளது. இந்தப் பகுதி 2024-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிக விற்பனையைப் பதிவு செய்தது. வடக்கு பெங்களூரு 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொழில்துறை பகுதியாக இருந்தது. ஆனால் அதன் பிறகு பெங்களூரு சர்வதேச விமான நிலையம் மான்யதா தொழில்நுட்ப பூங்காவின் கட்டுமானம் போன்றவற்றால் இங்கு உள்ள பகுதிகள் கிடுகிடு வளர்ச்சியை எட்டியது.

பெங்களூரின் சில பகுதிகளில் நிலம், வீடு ஆகியவை இன்னும் மலிவு விலையில் உள்ளதாக ஹனு ரெட்டி ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த கிரண் குமார் தெரிவித்திருக்கிறார். அவருடைய கூற்றுப்படி தேவனஹள்ளியில் ரூ . 1 கோடிக்கும் கீழ் 1200 சதுர அடியில் 3 பிஹெச்கே வீடுகளை எளிதாக பெறலாம் என்றும் அப்ரிகேட் குரூப் மற்றும் சத்துவா போன்ற பல டெவலப்பர்கள் இந்த புது புது திட்டங்களை தொடங்குகின்றனர். வர்தூர் சாலை, பாணத்தூர் மற்றும் சர்ஜாபூர் சாலையின் புறநகர்ப் பகுதிகளில் இன்னும் ரூ.1 கோடி வரம்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன என்றும் குமார் கூறியுள்ளார்.

கனகாபுரா சாலை போன்ற பிற இடங்களில், காசாகிராண்டே போன்ற பல டெவலப்பர்கள், 1100 சதுர அடிக்கு ரூ.4,200 முதல் ரூ.8,800 விலையில் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி வருகின்றனர். கே.ஆர்.புரம் போன்ற கிழக்கில் உள்ள பகுதிகளில், ரூ. 5,200 முதல் ரூ.9,000 விலை வரம்பிற்குள் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. மாரத்தஹள்ளியில் ரூ. 4,800 முதல் ரூ. 9,200 விலை வரம்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கிடைக்கின்றன. எனவே பெங்களூரில் வீடு வாங்க தேடிக் கொண்டிருந்தால், இந்த பகுதிகள் குறித்தும் பரிசீலிக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+