இந்தியாவில் தற்போது எஸ்யூவி ரக கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்திருக்கிறது. எனவே பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு எஸ்யூவி ரக மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக பட்ஜெட் விலையில் எஸ்யூவி கார்களை வழங்குவதில் நிறுவனங்கள் தீவிரமாக இருக்கின்றன. அந்த வகையில் தற்போது Panaromic sunroof கொண்ட எஸ்யூவி கார்களை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
வழக்கமான sunroof கார்களை விட Panaromic sunroof கார்களில் கார் முழுவதும் சூரிய வெளிச்சம் கிடைக்கும். காரில் அமர்ந்து கொண்டு அப்படியே வானத்தை ரசிக்கலாம். இது இதமான மனநிலையை அளிப்பதால் இந்த வசதி கொண்ட கார்கள் சந்தையில் வேகமாக விற்பனையாகின்றன.

1.Mahindra XUV 3XO: மகேந்திரா நிறுவனத்திலிருந்து வெளியாக கூடிய பட்ஜெட் விலையிலான எஸ்யூவி ரக கார் இது என கூறலாம். Panaromic sunroof வசதியுடன் கிடைக்கும் இந்த காரின் ஆரம்ப விலை 12 . 49 லட்சம் ரூபாய் ஆகும். மகேந்திராவின் தரமான கார்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
2.MG Astor: இதுவும் Panaromic sunroof கொண்ட பட்ஜெட் விலை எஸ்யூவி கார் ஆகும். இதன் குறிப்பிட்ட மாடல்களில் இந்த வசதி கிடைக்கிறது. இந்த காரின் விலை 13 .11 லட்சம் ரூபாயாகும். இது பெட்ரோல் என்ஜின் கொண்டது ஐந்து வகையான ஸ்பீடு மேனுவல் கொண்டுள்ளது.
3. Kia Seltos : கியா நிறுவனத்தில் கிடைக்கக்கூடிய பட்ஜெட் விலையிலான மாடல் தான். கியா செல்டாஸ் மாடல் கார்களின் விலை 14 லட்சம் ரூபாய் ஆகும்.
4.Hyundai Creta: ஹுண்டாய் நிறுவனம் வழங்கக்கூடிய பட்ஜெட் விலையிலான எஸ்யூவி கார்களிலேயே கிரெட்டாவில் தான் Panaromic sunroof வசதி இருக்கிறது. இதன் விலை 14.36 லட்சம் ஆகும்.
5.Maruti Suzuki Grand Vitara: மாருதி சுசுகியின் விட்டாராவின் ஆல்பா வகையில் இந்த வசதி இருக்கிறது. இதன் விலை 15.47 லட்சம் ரூபாய் ஆகும்.
6.Toyota Urban Cruiser Hyryder: இந்த கார் பெட்ரோல் என்ஜினில் இயங்கக் கூடியது. இது ஜி மற்றும் வி என இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது. இந்த காரின் விலை 15 லட்சம் ரூபாய் ஆகும் .
7. Hyundai Alcazar: ஹூண்டாய் அல் கசார் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் ஆறு வகையான ஸ்பீட் மேனுவல் உடன் கிடைக்கிறது. Panaromic sunroof கொண்ட இந்த காரின் ஆரம்ப விலை 16.78 லட்சம் ரூபாய் ஆகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications