காதலர் தினம் நெருங்கிடுச்சு.. எப்படி தீபாவளி பொங்கல் பண்டிகை கலைக்கட்டுமோ அதேபோல காதலர்களிடையே மிகவும் பிரபலமான தினம் என்றால்.. அது காதலர் தினம் தான். சிங்கிள்ஸ் எல்லாம் ஒரு மூலையில் அமர்ந்து புலம்பி கொண்டிருக்கையில் தங்கள் காதலி/காதலனுக்கு என்ன பரிசை வழங்கலாம் என யோசிக்கும் காதலர்களுக்காகத்தான் இந்த பதிவு. சாக்லேட்டுகள், பூக்கள், விலை உயர்ந்த பரிசுகள் என பல்வேறு விருப்பங்கள் இருந்தாலும் பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் கீழ்காணும் பரிசுகளை வழங்கலாம்.
பட்ஜெட் காதல்: காதலர் தினம் மாதத்தின் நடுப்பகுதியில் வருவதால் ஈஎம்ஐ, பிற கடன்கள், குடும்பச் செலவுகள் என அனைத்தையும் செய்து விட்டு விலை உயர்ந்த பரிசுகளை வாங்க முடியாத சூழலில் பல காதலர்கள் இருப்பதுண்டு. எனவே இந்த பதிவில் 100 ரூபாய்க்கும் கீழ் உங்கள் காதலி/காதலனுக்கு என்னென்ன பரிசுகளை வழங்கலாம் என்று பார்ப்போம்.

100 ரூபாய்க்கும் கீழ் காதலர் தினத்துக்கு வாங்க கூடிய பரிசுகள்:
மெழுகுவர்த்திகள்: தற்போது சந்தைகளில் அழகழகான வடிவங்களில் மெழுகுவர்த்திகள் கிடைக்கின்றன. இவை வாசனையூட்டப்பட்ட மெழுகுவர்த்திகளாகவும் உள்ளன. எனவே உங்கள் துணைக்கு ஏற்ற லாவண்டர் அல்லது வெண்ணிலா என பல ஃப்ளேவர்களில் கிடைக்கும் மெழுகுவர்த்திகளை பரிசாக வழங்கலாம். இந்த வாசனை சற்று மன அமைதியை அளிக்கக் கூடிய ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
போட்டோ பிரேம்: 100 ரூபாய்க்கும் கீழ் ஹார்ட் டிசைன், ரெக்டாங்கில் டிசைன் போன்ற வடிவங்களில் போட்டோ பிரேம்கள் உள்ளன. நீங்களும் உங்கள் துணையும் இருப்பது போன்ற போட்டோக்களை வைத்து போட்டோ பிரேமை பரிசளிக்கலாம்.
ஹேண்ட் மேட் பிரேஸ்லெட்: கையால் செய்யப்பட்ட பிரேஸ்லெட்டுகளை பரிசாக வழங்கலாம். தற்போது பிரத்யேகமாக வடிவமைக்கப்படும் பிரேஸ்லெட்டுகள் பிரபலமடையத் தொடங்கியுள்ளன. இதை உங்கள் காதலன் அல்லது காதலி ரசனைக்கு ஏற்ப வடிவமைத்து பெற முடியும். உதாரணமாக அவர்களுடைய பெயர் அல்லது அவர்களுக்கு பிடித்த பொம்மைகள் போன்றவற்றை கொண்டு வடிவமைத்து வழங்கலாம்.
காபி மக்: நீங்கள் வழங்கும் கிப்ட்டை உங்கள் காதலன்/காதலி தினமும் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் ஒரு காபி மக்கை பரிசளிக்கலாம். உங்கள் இருவருக்கும் பிடித்தமான டெக்ஸ்டுகள் அல்லது உங்களுடைய பெயர், உங்கள் இருவருக்கும் பிடித்த இடம் என அதில் நீங்கள் நினைக்கும் விதத்தில் வடிவமைத்து பரிசாக வழங்கலாம். இதை அவர்கள் தினமும் காபி அல்லது டீ குடிக்கும் போது பயன்படுத்துவார்கள். மேலும் உங்களுடைய பரிசு தினமும் அவர்களின் நினைவில் நிற்கும்.
ரூ. 50-க்கும் கீழ் வழங்கக்கூடிய பரிசுகள்:
கார்டு: சிலருக்கு கவிதை எழுதுவது பிடிக்கும் அல்லது ஒருவரை பற்றி வர்ணித்து எழுதுவதும் பிடிக்கும். அப்படி இருக்கும் காதலர்கள், காதலர் தினத்திற்கு கார்டுகளை வழங்கலாம். இதில் உங்களுக்கு விருப்பமான விஷயத்தை எழுதி பரிசளிக்கலாம்.
சாக்லேட்டுகள்: உங்கள் அன்புக்குரியவர்களின் முகத்தில் உடனடியாக புன்னகையை வரவழைக்கும் ஒரு பொருள் என்றால் அது சாக்லேட்டுகள் தான். கிட்டத்தட்ட அனைவராலும் விரும்பப்படும் ஒரு பொருள். எனவே உங்கள் துணையை மகிழ்விக்கவும் சாக்லேட்களை வழங்கலாம்.
கீ செயின்: இன்றெல்லாம் பல காதலர்களின் நினைவுச் சின்னமாக இருப்பது என்னவோ கீ செயின்கள் தான். பொம்மை வடிவங்கள், பெயர் கொண்ட கீ செயின்கள் என விதவிதமான விற்கப்படும் கீ செயின்களில் ஒன்றை பரிசளிக்கலாம். பட்ஜெட்டில் காதல் பரிசு வாங்க நினைப்பவர்கள் மேலே கூறப்பட்டுள்ள ஏதேனும் ஒன்றை வாங்கிக் கொடுக்கலாம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications