ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது, ரிக்டர் அளவுகோலில் 6 என பதிவான நிலையில் இப்பகுதியில் சுமார்வ800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என AFP செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கம் தென்கிழக்கு ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு இருந்த காரணத்தால் ஆப்கானிஸ்தான் மட்டும் அல்லாமல் பாகிஸ்தான், இந்தியாவின் டெல்லி-NCR பகுதி வரை நடுக்கத்தை உணர்த்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள குனார் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டு இப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வந்த நிலையில் கடந்த சில வருடங்காக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நேரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
தலிபான் அரசின் தலைமை பேச்சாளர் சபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தபடி, குனார் மாகாணத்தில் மட்டும் 800 பேர் உயிரிழந்து, 2,500 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணியாளர்கள் சேதமடைந்த இடங்களில் உயிர் தப்பியவர்களை தேடி வருகின்றனர், மேலும் ஹெலிகாப்டர்கள் காயமடைந்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன என தெரிவித்தார்.

அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (USGS) வெளியிட்டுள்ள தகவல் படி இந்த நிலநடக்கம் சுமார் 12 லட்சம் பேர் வலுவாக அல்லது மிகவும் வலுவான நடுக்கத்தை உணர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 6.0 என்ற ரிக்டக் அளவிலான நிலநடுக்கம், 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம், ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) மற்றும் ஐரோப்பிய நிலநடுக்க மையம் (EMSC) ஆகியவை இதை உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவி செய்ய அந்நாட்டின் தாலிபான் அரசு மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்து மீட்பு பணிகளுக்காகவும், மக்களின் அடிப்படை தேவைக்காகவும் உதவி செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications