ஆசியாவில் 3 முக்கியமான போர் நடந்து வருவதால் மொத்த முதலீட்டு சந்தையும் மோசமான நிலையில் உள்ளது. எதற்கும் அசராத தங்கம் கூட தற்போது விலை குறைந்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் முடியாத நிலையில், ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா மத்தியிலான போர் தீவிரமடைந்து வரும் வேளையில்.. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் மத்தியிலான போர் தாக்குதல்கள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. காபூலில் நடந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் முக்கிய ராணுவ தளங்களை மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, கைய்பர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) மாகாணத்தின் கோஹாட் (Kohat) பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய தளங்கள் மீது ஆப்கான் விமானப்படை தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய நாளில் இருந்த பாகிஸ்தான் உடனான உரசல் இருந்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் சமூக ஊடகமான X-ல் வெளியிட்ட பதிவில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இரவு நேர தாக்குதல்களுக்கு பதிலடி நடவடிக்கையாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக டுராண்ட் எல்லை அருகே உள்ள ராணுவ கட்டமைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதலில் கோஹாட் பகுதியில் உள்ள ஒரு முக்கிய ராணுவ கோட்டை தாக்கப்பட்டதாகவும், அந்த கோட்டைக்கு அருகில் உள்ள போர் கட்டுப்பாட்டு மையமும் துல்லியமாக டார்கெட் செய்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.

இக்கோட்டையின் கமெண்டிங் அதிகாரி அலுவலகம் மற்றும் டுராண்ட் எல்லை அருகே அமைந்திருந்த ராணுவ கட்டுப்பாட்டு மையமும் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகள், ஆயுத களஞ்சியங்கள் மற்றும் ராணுவ படையினர் தங்கும் குடியிருப்புகள் உள்ளிட்ட பல அமைப்புகள் சேதமடைந்ததாகவும், மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் ஆப்கான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் வெளியிட்ட இந்த தகவல்களை பாகிஸ்தான் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆப்கானிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு முன்பு, பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தான் காபூலில் தாக்குதல் நடத்தியதாக தாலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ளது. குறிப்பாக காபூல் மற்றும் கந்தகார் மாகாணங்களில் பாகிஸ்தான் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தாலிபான் அரசின் செய்திதொடர்பாளர் Zabihullah Mujahid தெரிவிக்கையில், பாகிஸ்தான் விமானங்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை தாக்கியதாகவும், அந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாகவும் கூறினார்.
மேலும் கந்தகார் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் விமான சேவை நிறுவனமான Kam Air நிறுவனத்தின் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளும் தாக்கப்பட்டதாக தாலிபான் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை.
More From GoodReturns

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!



Click it and Unblock the Notifications