தாலிபான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் என எதிலும் பெரிய அளவிலான முன்னேற்றம் அடையாமல் அப்படியே உள்ளது.
ஆனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்த ஏற்றுமதி வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்று வருவது அந்நாட்டின் அரசைக் காப்பாற்றி வருகிறது.
இந்த நிலையில் நாட்டையும், ஆட்சியையும் தனியாகச் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்த ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் நாட்டின் முந்தைய ஆட்சியின் போது இந்தியா, உள்கட்டமைப்பு முதல் பல துறையில் முதலீடு செய்து பெரிய அளவில் அந்நாட்டின் வளர்ச்சிக்கு உதவியது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முந்தைய ஆட்சியில் இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகள் உதவியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் உதவி
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் ஆட்சி செய்யும் தாலிபான்கள் இந்தியாவின் உதவியை நாடியுள்ளனர், இந்தக் கோரிக்கையை ஏற்று இந்தியாவும் உதவி செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வங்கி துறை
ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய வங்கியான Da Afghanistan Bank (DAB) அந்நாட்டின் வங்கித் துறையில் தொழில்நுட்ப உதவிகள் தேவை என இந்தியாவிடம் கோரிக்கை வைத்தது, இதை ஏற்று இந்தியா உதவி செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தை இயக்க அரபு நாடுகளிடம் உதவியை நாடியது.
தொழில்நுட்ப உதவி
சமீபத்தில் ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியான Da Afghanistan Bank (DAB)-யின் தலைவர் அப்துல் காதர் இத்ரீஸ், இந்தியத் தொழில்நுட்ப அணியின் தலைவரான பரத் குமார்-ஐ காபூலில் சந்தித்தார். இந்த முக்கியமான சந்திப்பில் ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதாரச் சூழ்நிலை, வங்கி பிரச்சனைகள் ஆகியவற்றைக் குறித்தும், இரு நாடுகள் எப்படி இணைந்து செயல்படப் போகிறது என்பது குறித்தும் பேசியுள்ளார்.
இந்தியாவின் ஒத்துழைப்பு
ஆப்கானிஸ்தான் வங்கித் துறையில் ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதை Da Afghanistan Bank-யின் பொது மேலாளர் சித்திகுல்லா காலித் விளக்கினார். இந்தியாவின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் உதவிகள் ஆப்கானிஸ்தான் நாட்டின் வங்கி அமைப்பை வலுப்படுத்தும் என்றும் கூறினார்.
நிதி முடக்கம்
கடந்த ஆண்டுத் தாலிபான்கள் ஆப்கானிஸ்தான்-ஐ கையகப்படுத்திய பிறகு நிதி மோசடி மற்றும் நிதி முடக்கத்தைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் வங்கி அமைப்பு கடுமையான நெருக்கடியில் மாட்டிக் கொண்டு உள்ளது.
9 பில்லியன் டாலர்
இது மட்டும் அல்லாமல் Da Afghanistan Bank-ஐ சர்வதேச வங்கி அமைப்பு, நிதி சமூகம் மற்றும் பிற நாடுகளின் உள்நாட்டு வங்கிகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் வெளிநாட்டு மத்திய வங்கிகளில் ஆப்கானிஸ்தானுக்குச் சொந்தமான 9 பில்லியன் டாலர் அளவிலான அந்நியச் செலாவணி கையிருப்புகளை DAB பயன்படுத்த முடியாமல் உள்ளது.
பொருளாதார வளர்ச்சி
ஆப்கானிஸ்தான் நாட்டைத் தாலிபான்கள் கைப்பற்றிய 2021 ஆம் ஆண்டில் அந்நாட்டின் பொருளாதாரம் -20 சதவீதமாகச் சரிந்துள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதார அளவில் இதை "new normal" எனவும் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நிலை
இதேவேளையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு செலவு செய்யும் அளவீடு, குறைந்த அளவிலான குடும்ப வருமானம், தொடர்ந்து குறைந்து வரும் மக்களின் நுகர்வு ஆகியவை அந்நாட்டின் டிமாண்ட் அளவை பெரிய அளவில் பாதித்துள்ளது.


Click it and Unblock the Notifications