1782 விண்ணப்பங்கள்.. 14 மாதங்கள்! இறுதியாக வேலைவாய்ப்பை பெற்ற நபர்! என்ன நடக்கிறது இந்தியாவில்!

வேலைச் சந்தையில் தினசரி அடிப்படையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. வேலை இழந்த ஒருவர் மீண்டும் ஒரு நல்ல வேலை வாய்ப்பை பெறுவது என்பது பெரும் சிக்கல் தரக்கூடிய விஷயமாகவே மாறிவிட்டது. ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள், எண்ணற்ற இன்டர்வியூக்கள், இறுதியில் ஏமாற்றம்.. இதுதான் பல பட்டதாரிகள் மற்றும் அனுபவம் பெற்ற ஊழியர்களின் கதையாக உள்ளது.

அப்படிப்பட்ட சூழலில் ஒருவர் 14 மாதம் வேலை தேடிய தனது கதையை ரெட்டிட்-இல் பகிர்ந்திருக்கிறார். அதை பார்க்கும்போது வேலையில்லா திண்டாட்டத்திற்கு ஒரு முகம் இருந்தால் எப்படி இருக்கும்? என்பதை தெள்ளத்தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

1782 விண்ணப்பங்கள்.. 14 மாதங்கள்! இறுதியாக வேலைவாய்ப்பை பெற்ற நபர்! என்ன நடக்கிறது இந்தியாவில்!

இதுவரையில் அந்த நபர் 1782 வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளார். அதில் 1400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அவரை நிராகரித்துள்ளது. 200-க்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு எந்தவித பதிலுமே கிடைக்கவில்லை. இறுதியாக தற்போது ஒரு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வேலை தேடல் தனக்கு மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

"நான் வேலை தேடும் போது சொல்ல முடியாத அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக அதை கடந்து வந்து விட்டேன். என்னுடைய கதை வெறும் வேலைவாய்ப்பு மற்றும் இன்டர்வியூக்களை பற்றியது மட்டுமல்ல. என்னிடம் நிறுவனங்களுக்கு தேவைப்படும் திறன் இல்லையோ? என்ற ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது. அதைத் தான் என்னால் எதிர்கொள்ள முடியவில்லை", என்று அந்தப் பயனர் குறிப்பிட்டிருந்தார்.

முதல் 8 மாதங்களில் அந்த பயனர் தெளிவான திட்டமிடல் இல்லாமல் 1200 விண்ணப்பங்களுக்கும் அதிகமாக அனுப்பியுள்ளார். அவர் ஜாப் டெஸ்கிரிப்ஷன் என்ன? என்பது கூட தெரிந்து கொள்ளாமல் சில வேலைகளுக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த முறையற்ற அணுகுமுறையின் காரணமாக 5 இண்டர்வியூவில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் ஒன்று மோசடியாக அமைந்தது. அதிலிருந்து மீண்டு திரும்பவும் வேலைக்கு விண்ணப்பிக்க சிறு இடைவெளி எடுத்துக்கொண்டார்.

அவர் எடுத்துக்கொண்ட இடைவெளி எல்லாவற்றையும் மாற்ற உதவியது. அடுத்ததாக 582 விண்ணப்பங்களை நிறுவனங்களுக்கு அனுப்பினார். இதில் 23 இன்டர்வியூவில் கலந்து கொண்டார். இறுதியாக அவருடைய முயற்சிக்கு பலன் கிடைத்து. ஒரு வேலைவாய்ப்பும் கிடைத்தது.

வேலை தேடும் நாட்களில் அந்தப் பயனர் கிளாஸ்டோர், ஏஎம்ஏ இன்டர்வியூ, சாட் ஜிபிடி போன்ற தளங்களை அதிகம் பயன்படுத்தியதாகவும், அவை தனக்கு பெரிதும் உதவியதாகவும் பகிர்ந்திருந்தார். இன்டீட், ஹேண்ட்ஷேக் மற்றும் லிங்க்டின் ஆகியவை அவருடைய வேலை தேடலுக்கு அதிகம் பங்களித்ததாகவும் கூறியிருந்தார்.

பலமுறை எந்தவித பதிலும் இன்றி நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டேன். நிறைய இன்டர்வியூக்களில் சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் அமைதி தான் அதற்கும் பதிலாக கிடைத்தது. இதனால் பல இரவுகள் நான் தூங்காமல் விழித்து, என்னையே கேள்வி கேட்டுக் கொண்டிருப்பேன். இந்த விஷயத்தில் நான் கற்றுக் கொண்ட மிக முக்கியமான பாடம் என்னவென்றால், நாம் பெர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்.

அந்த பயனர் தனது பதிவை நம்பிக்கையுடன் முடித்திருந்தார். ஒவ்வொரு முறையும் வேலை தேடும் போது வேலை கிடைக்கவில்லை என்றால் நீங்கள் தோல்வியடைந்ததாக நினைக்காதீர்கள். நீங்கள் தனியாக இல்லை. வேலை சந்தை மிகவும் போட்டித் தன்மை வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் அது உங்களின் மதிப்பை பிரதிபலிக்காது. தொடர்ந்து முன்னேறுங்கள்! என்று கூறி தனது பதிவை முடித்திருந்தார். இந்த ரெட்டிட் பயனரின் பதிவுக்கு பலர் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்து கமெண்ட் செய்ய தொடங்கினர். விடாமுயற்சியும் சரியான திட்டமிடலும் இருந்தால் தடைகளைத் தாண்டி உங்கள் இலக்கை அடைய முடியும் என்பதை இந்தப் பதிவு நிரூபிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+