அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கனவு, உள்நாட்டிலேயே உருவான MapmyIndia நிறுவனத்தின் Mappls செயலி மூலம் வலுப்பெற்றுள்ளது. சமீபத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த செயலியை பாராட்டியதுடன், இந்திய தொழில்நுட்பங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் புதிய அத்தியாயம்: அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் இந்தப் பாராட்டுக்குப் பிறகு, இந்நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் 8%க்கும் மேல் உயர்ந்தன. இந்த நிறுவனம், இந்தியாவில் முதல் முறையாக பெங்களூருவில் நிகழ்நேர சிக்னல் கவுண்ட்டவுன் வசதியை அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மேலும், இந்தியா போஸ்ட்டின் டிஜிபின் (DIGIPIN) அமைப்புடன் Mappls செயலி ஒருங்கிணைக்கப்பட்டு வருவதுடன், முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுடனும் கூட்டு வைத்துள்ளது. அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சட்டர்ன் கார் திட்டத்தில் 12 ஆண்டுகள் பணிபுரிந்து, நிலையான வாழ்க்கையை வாழ்ந்து வந்த ராகேஷ் வர்மா என்பவரின் கதைதான் மேப் மை இந்தியா நிறுவனத்தின் வெற்றிக்குப் பின்னால் உள்ளது.
1990களின் தொடக்கத்தில் டிஜிட்டல் வரைபடங்கள் பற்றிய விழிப்புணர்வே உலகளவில் குறைவாக இருந்தபோது, இந்தியாவின் வளர்ச்சிக்காக உள்நாட்டு டிஜிட்டல் வரைபடங்களை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் இந்தியா திரும்பினார் ராகேஷ் வர்மா.
பிட்ஸ் பிலானியில் பொறியியல் பட்டமும், ஈஸ்டர்ன் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்ற இவர், ஆரம்பத்தில் குறைந்த விழிப்புணர்வும் வளங்களும் இருந்தபோதிலும், புவியிட தரவுகளின் ஆற்றலில் கொண்ட நம்பிக்கையுடன் MapmyIndia நிறுவனத்தை தொடங்கினார்.
கூகுள் மேப்புக்கு சவால்விடும் MapmyIndia: மேப் மை இந்தியா ஒரு தொழில்நுட்ப நிறுவனமாக வளர்ந்து, அரசாங்க அமைப்புகள், பாதுகாப்புத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான பகுப்பாய்வு மற்றும் கண்காணிப்பு தீர்வுகளை வழங்கி வருகிறது. வர்மாவின் நிறுவனம் தற்போது தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, கூகுள் மேப்ஸுக்கு மாற்றாக Mappls செயலியை வழங்குகிறது.
மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் போன்ற இந்திய அசல் உபகரண உற்பத்தியாளர்களின் வாகனங்களில் இதன் தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் இந்தியத் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட வாகன வழிசெலுத்தல் அமைப்புகளை செயல்படுத்துகின்றன..
பல்வேறு இந்திய மொழிகளை ஆதரிக்கும் இந்த செயலி, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான போக்குவரத்து புதுப்பிப்புகள், 3D வரைபடங்கள் மற்றும் நிகழ்நேர சிக்னல் டைமர்கள் போன்ற புதுமையான வசதிகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர்கள் மட்டுமல்லாது, ஸோஹோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவும் தனியுரிமை குறித்த, தன்னம்பிக்கை கொண்ட புதிய கண்டுபிடிப்புகளுக்கு Mappls ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று பாராட்டியுள்ளார்.
அமெரிக்காவில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராகேஷ் வர்மா, தனது வேலையை விட்டுவிட்டு, கூகுள் மேப்ஸின் உலகளாவிய வணிகத்திற்கு சவால் விடும் மேப் மை இந்தியா நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். ஒருவரின் தொலைநோக்கு பார்வை இந்தியாவின் டிஜிட்டல் பாதையை எப்படி மாற்றி அமைத்துள்ளது என்பதற்கு சிறந்த சான்றாக இது விளங்குகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications