இந்தியாவில் கடந்த 18 நாட்களாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருந்த வேளையில் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையிலும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விதிப்பு குறித்துத் தீர்வு காணப்பட்ட வேளையிலும் இன்று டீசல் விலை உயர்ந்துள்ளது.
இன்று டீசல் விலை லிட்டருக்கு 20 முதல் 24 பைசா வரையில் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு செப்டம்பர் 5ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 15 பைசா குறைந்தது குறிப்பிடத்தக்கது.
சுத்திகரிப்பு நிறுவனங்கள்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள விலை அடிப்படையில் பெட்ரோல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாத விலையில், டீசல் விலை 20 பைசாவுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
சென்னை - பெங்களூர்.
இதன் மூலம் ஒரு லிட்டர் டீசல் விலை சென்னையில் 20 பைசா அதிகரித்து 93.46 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதேபோல் பெங்களூரில் 23 பைசா அதிகரித்து 94.27 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் டீசல் விலை அதிகரித்துள்ளது
டீசல் விலை
சென்னை - 93.46 ரூபாய்
டெல்லி - 88.82 ரூபாய்
கொல்கத்தா - 91.92 ரூபாய்
மும்பை - 96.41 ரூபாய்
பெங்களூர் - 94.27 ரூபாய்
ஹைதராபாத் - 96.92 ரூபாய்
கோழிக்கோடு - 93.97 ரூபாய்
பெட்ரோல் விலை
சென்னை - 98.46 ரூபாய்
டெல்லி - 101.19 ரூபாய்
கொல்கத்தா - 101.62 ரூபாய்
மும்பை - 107.26 ரூபாய்
பெங்களூர் - 104.70 ரூபாய்
ஹைதராபாத் - 105.26 ரூபாய்
கோழிக்கோடு - 101.65 ரூபாய்
சர்வதேச சந்தை
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 0.18 சதவீதம் அதிகரித்து 73.43 டாலர் வரையில் அதிகரித்துள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.36 சதவீதம் அதிகரித்து 77.53 டாலராக உயர்ந்துள்ளது.
இதேபோல் ஒரு பேரல் OPEC பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை 1.06 சதவீதம் வளர்ச்சி அடைந்து 74.46 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் ஒரு பேரல் இந்தியன் பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை 1.40 சதவீதம் அதிகரித்து 73.72 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
ஜிஎஸ்டி கூட்டம்
கடந்த வாரம் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவின் பெயரில் இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல்-க்கு ஜிஎஸ்டி விதிப்பு செய்வது குறித்து விவாதம் செய்யப்பட்டது.
மாநிலங்கள் மத்திய அரசின் தலையீடு இல்லாமல் வருமானம் பெரும் ஓரே ஒரு வரி வருமான தளம் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரி தான். இந்த காரணத்தால் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் பெட்ரோல் மற்றும் டீசல்-க்கு ஜிஎஸ்டி விதிப்பு செய்ய மறுப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பெட்ரோலியம் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியை விதிக்க இது சரியான காலம் இல்லை என்பதை உணர்ந்து இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.


Click it and Unblock the Notifications