சர்வதேச நாடுகளுக்கு மிகப்பெரிய போட்டியாக விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமான வளர்ச்சியை எட்டி வருகிறது. இந்தியா முதன்முறையாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கூடிய விரைவில் இந்தியா ககன்யான் திட்டம் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப இருக்கிறது.
ககன்யான் திட்டம்: இந்தியாவின் இந்த கனவை நிறைவேற்றும் வகையில் ககன்யான் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இந்தியா விமானப்படை விமானியான குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமிக்கு திரும்பி இருக்கிறார். ஆக்ஸியம் 4 திட்டத்தின் மூலம் நாசா ,இஸ்ரோ ,ஐரோப்பிய ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த 25 ஆம் தேதி டிராகன் விண்கலம் மூலம் இந்திய விமானப்படை வீரரான சுபான்ஷூ சுக்லா உள்பட நான்கு வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைத்தது.

சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்: கிட்டத்தட்ட 28 மணி நேரம் பயணம் செய்த இவர்கள் 26ஆம் தேதி சர்வதேச மின்வெளி நிலையத்தை சென்று அடைந்தனர். இதில் விண்கலத்தை இயக்கும் பொறுப்பை சுபான்ஷூ சுக்லா ஏற்றிருந்தார். இதனை அடுத்து இந்த நான்கு வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர்.
தன்னுடைய விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக சுபான்ஷூ சுக்லா பிரதமர் நரேந்திர மோடியுடன் கடந்த 28ஆம் தேதி விண்வெளியில் இருந்த படி கலந்துரையாடினார் .இதனை அடுத்து 500 மாணவ மாணவிகளுடன் அவர் விண்வெளியில் இருந்து நேரலையில் பேசினார்.
விண்வெளியில் சுபான்ஷூ சுக்லா ஆய்வு: 17 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த அவர் 60 வகையான ஆய்வுகளை மேற்கொண்டார். விதைகள் முளைக்கின்றனவா, விண்வெளியில் நுண்ணுயிரிகள் வளர்கின்றனவா என்பன உள்ளிட்ட ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். இந்த நிலையில் பயணம் முடிந்து சுக்லா உள்ளிட்ட நான்கு வீரர்களும் இன்று பத்திரமாக பூமிக்கு திரும்பி இருக்கின்றனர் . சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட நான்கு வீரர்களும் நேற்று மாலை 4:35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து டிராகன் விண்கலம் மூலம் பூமியை நோக்கி தங்களுடைய பயணத்தை தொடங்கினர். 23 மணிநேர பயணத்திற்குப் பிறகு டிராகன் விண்கலம் பூமியை வந்து அடைந்தது.
புன்னகையுடன் பூமிக்கு திரும்பினார்: பூமிக்கு திரும்பிய சுபான்ஷூ சுக்லா புன்னகையுடன் வெளியே வந்தார். சுபான்ஷூ சுக்லாவை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் . அதில் குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லாவை வரவேற்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று வந்த முதல் விண்வெளி வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக சுபான்ஷூ சுக்லா இருக்கிறார் என பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவின் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பக்கூடிய ககன்யான் திட்டத்தில் சுக்லாவின் இந்த விண்வெளி பயணம் மிக முக்கியமான ஒரு மைல்கல் என குறிப்பிட்டு இருக்கிறார். தன்னுடைய தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு மூலம் கோடிக்கணக்கான கனவுகளை அவர் நிறைவேற்றி இருக்கிறார் என கூறியிருக்கிறார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications