டாடா ஸ்கை நிறுவனமாக இருந்து இன்றைய வர்த்தகச் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மாறியுள்ள டாடா ப்ளே ஐபிஓ வெளியிட திட்டமிட்டு உள்ளது.
DTH சேவை நிறுவனமான டாடா ப்ளே நவம்பர் 29 ஆம் தேதி மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிடுவதற்காக விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது.
ஆனால் இந்த விண்ணப்பம் மிகவும் வித்தியாசமான முறையில் புதிய சலுகையில் கீழ் டாடா ப்ளே செபி-யிடம் சமர்ப்பித்துள்ளது.
டாடா குழுமம்
2004 ஆம் ஆண்டு டாடா குழுமம் தனது முக்கிய ஐடி சேவை பிரிவான டாடா கண்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தை ஐபிஓ வெளியிட்டு இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பின்பு, டாடா குழுமத்தில் இருந்து வரும் ஐபிஓ டாடா ப்ளே. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்பு உள்ளது.
டாடா ப்ளே
டாடா ப்ளே இந்த ஐபிஓ மூலம் சுமார் 2000 முதல் 2500 கோடி ரூபாய் வரையிலான தொகையை முதலீடாகத் திரட்ட உள்ளது.இந்த ஐபிஓ மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களாக Temasek மற்றும் Walt Disney போன்ற நிறுவனங்கள் வெளியேற வாய்ப்பாக இருக்கும்.
பங்குதாரர்கள்
தற்போது டாடா ப்ளே நிறுவனத்தில் சிங்கப்பூரின் Temasek ஹோல்டிங்கஸ், Tata Opportunities Fund மற்றும் வால்ட் டிஸ்னி ஆகியவை மட்டுமே 37.8 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்த ஐபிஓ மூலம் Temasek ஹோல்டிங்கஸ் மற்றும் வால்ட் டிஸ்னி தனது பங்குகளை விற்பனை செய்து விட்டு வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செபி
செபி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் வழங்கும் ரகசிய 'pre-filing' வழியைப் பயன்படுத்தி ஐபிஓ ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் செய்த முதல் நிறுவனமாக டாடா ப்ளே உருவெடுத்துள்ளது.
ரகசிய pre-filing
இந்த ரகசிய pre-filing வழி மூலம் ஒரு நிறுவனம் முக்கியமான வர்த்தகத் தகவலைக் பொதுச் சந்தைக்குத் தெரிவிக்காமல் ஐபிஓ-விற்கான ஆவணங்களைப் பங்குச்சந்தை ரெகுலேட்டர் அமைப்பான செபி-யிடம் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுகிறது.
முக்கியச் சலுகை
ஐபிஓ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் வரை, பொதுவெளியில் இருந்து இந்த ஆவணங்களை வெளியிடுவதை இந்த விதிமுறை அனுமதிக்கிறது. இந்த ரகசிய ஐபிஓ தாக்கல் மூலம் ஒரு நிறுவனத்தின் விண்ணப்பத்தைச் செபி ரகசியமாக ஆய்வு செய்யும், இதேபோல் ஐபிஓ வெளியிடும் சில நாட்கள் முன்பு வரையில் ஐபிஓ விபர அறிக்கையைப் பொது வெளியில் வெளியிடாமல் தக்க வைக்க முடியும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications