ஒரு காலத்தில், 40 வயதை நெருங்கும் தொழில் வல்லுநர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு பாதுகாப்பான நிலையை அடைந்துவிட்டதாக நினைப்பார்கள். நல்ல சம்பளம், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் மற்றும் குடும்பத்திற்கு அமைதியான வாழ்க்கையுடன் கூடிய நிலையான சூழ்நிலை. ஆனால் இப்போது, அந்த நிலை மாறிக் கொண்டிருக்கிறது. 40 வயதுக்கு பிறகு உங்களை வேலைக்கு அமர்த்த யாரும் விரும்ப மாட்டார்கள் என்ற கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார் சர்தக் அஹுஜா என்ற முதலீட்டு வங்கி ஆலோசகர்.
இப்போது இந்தியாவின் பெரிய நிறுவனங்களில், 40 வயதுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் மீது நம்பிக்கை குறைவாகிறது. நம்பிக்கையோடு பெரிய பதவிகளுக்கு அவர்கள் முன்னேற முடியாத நிலை உருவாகி வருகிறது. நிறுவனங்கள் இப்போது இளம் வேலைக்காரர்களை அதிகம் விரும்புகின்றன. குறைந்த சம்பளத்தில் அதிக வேலையை செய்யக் கூடியவர்களாக இளம் தலைமுறையை அவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் மூத்த தொழில் நிபுணர்களுக்கு அதிக சம்பளம், அதிக அனுபவம் என்பது நிறுவனங்களுக்கு செலவாக இருக்கிறது.

நிறுவனங்கள் மூத்த நிர்வாகிகளை முற்றிலுமாக நீக்குவதில்லை. மாறாக அவர்களை ஒதுக்கி வைக்கத் தொடங்கியுள்ளன. அவர்கள் புதிய, இளைய அணிகளை உருவாக்கி, மூத்தவர்கள் முன்பு செய்த அதே வேலைகளைச் செய்ய மற்றவர்களை கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் பதவி உயர்வு கிடைக்காது. அலுவலகத்தில் செல்வாக்கு குறையும். அலுவலக அரசியல் (office politics) அதிகமாகும். வேலை உங்களுக்கே தேவையா இல்லையா என்ற சந்தேகம் உங்களுக்குள் ஏற்படும்.
பலர் அழுத்தத்தை சமாளிக்க வேறு வழிகளைத் தேடுகிறார்கள். வார இறுதி நாட்களில் ஆலோசனைப் பணிகளைச் செய்யத் தொடங்குகிறார்கள். சிலர் "LLPs" என்று அழைக்கப்படும் சொந்த சிறிய நிறுவனங்களைத் தொடங்கி, ஒரு பக்க வருமானத்தைத் தேடுகிறார்கள். இது அவர்கள் தொழில்முனைவோராக மாறுவதால் அல்ல. வேலையின்மையின் எதிர்காலத்தைப் பற்றி அவர்கள் பயப்படுவதால் தான்.
சட்டம், மருத்துவம் போன்ற தொழில்களில் அனுபவம் மிகவும் மதிக்கப்படுகிறது. ஆனால் நிறுவனங்களில், அனுபவம் இப்போது ஒரு பெரிய செலவாகக் காணப்படுகிறது. "அவரை ஏன் வைத்திருக்க வேண்டும்?" என்று மேலாளர்களிடம் கேள்வி எழுகிறது.
இப்போது இளம் ஊழியர்கள் தான் முக்கியம் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் தான் புதிய தொழில்நுட்பத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதற்கு தயாரானவர்கள். நிறுவனம் விரும்பும் வேகத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்கிறார்கள்.
இந்த மாற்றம் கல்வி துறையிலும் தெளிவாகக் காணப்படுகிறது. ISB (Indian School of Business) போன்ற உயர்தர கல்வி நிறுவனங்களில் முன்னர் ஒரு மாணவரிடம் 6 வருட வேலை அனுபவம் இருந்தால் தான் சேர்க்கை கிடைத்தது. இப்போது 4 ஆண்டுகளுக்கு குறைந்துவிட்டது.
அது மட்டும் அல்ல. இப்போது சில MBA பள்ளிகள் நேரடியாக பட்டம் முடித்த உடனே சேர்க்கும் வகையில் 2 ஆண்டு MBA திட்டங்களை தொடங்கியுள்ளன. காரணம் ஆலோசனை நிறுவனங்கள் (consulting firms) இளம், புதிய பட்டதாரிகளை வேலைக்கு எடுத்துக்கொள்ள விரும்புகின்றன.
முதலீட்டு வங்கியாளர் சர்தக் அஹுஜாவின் கூறுகையில், நீங்கள் 40 வயதில் இருக்கிறீர்கள் என்றால், உங்களின் திறன்களை (skills) புதுப்பிக்க வேண்டும். இல்லை என்றால், உங்களைப் போன்றவர்களுக்கு உதவும் வகையில் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று கூறுகிறார்.
இந்தியாவில் இப்போது நடக்கும் இந்த மாற்றம், அனைவரையும் யோசிக்க வைக்கிறது. கடந்த 20-25 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தவர்கள், திடீரென தங்கள் எதிர்காலம் பாதுகாப்பானதல்ல என்பதைக் காண்கிறார்கள். உங்கள் வேலை உங்கள் வயதால் தீர்மானிக்கப்படாமல், உங்கள் திறனால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே இன்று வளர்ந்துவரும் யோசனை. இந்த மாற்றம் உங்களையும் பாதிக்குமா? அதற்கான திட்டங்களை இப்போது ஆரம்பிக்க வேண்டிய நேரம் இது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications