சமூக ஊடக தளமான டிவிட்டரை இந்த உலகத்தில் யாருக்கு தான் தெரியாது. ஆனால், இன்று அது "X" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் இந்த டிவிட்டரை வாங்கினார். 2022 அக்டோபர் மாதத்தில், அவர் டிவிட்டரை 41.8 பில்லியன் டாலருக்கு(ஏறக்குறைய ரூ.3.7 லட்சம் கோடி) வாங்கினார். ஆனால் வாங்கிய பிறகு, பல பிரச்சனைகள், சர்ச்சைகள், நஷ்டங்கள் என பல சிக்கல்கள் வந்தன. இதற்குப் பிறகு, தற்போது 2025 மார்ச் மாதம், அந்த நிறுவனத்தின் மதிப்பீடு மீண்டும் 41.8 பில்லியனாக ஆனது. இது மஸ்க்குக்கு ஒரு முக்கியமான வெற்றி ஆகும்.
2022-இல், மஸ்க் டிவிட்டரை வாங்கியது உலகத்தையே ஆச்சரியப்பட வைத்தது. எல்லாரும் ஏன் இந்தத் தளத்தை வாங்குகிறார்? என்று கேள்வி எழுப்பினார்கள். அவர் சொன்னார், நான் பேச்சு சுதந்திரத்தை (Freedom of Speech) பாதுகாக்கவே வாங்குகிறேன் என்று கூறினார். அதாவது, யாரையும் தடுக்காமல், ஒவ்வொருவரும் தங்கள் எண்ணங்களை சொல்வதற்கான உரிமை இருக்கவேண்டும் என்பதற்காக என்றும் குறிப்பிட்டார். அவர் அதில் சில முக்கிய முடிவுகளையும் எடுத்தார். டிவிட்டரின் கண்டெண்ட் விதிகளை மாற்றினார். கிட்டத்தட்ட 80% பணியாளர்களை பணிநீக்கம் செய்தார். புதிய தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகம் செய்தார். ட்விட்டரின் பெயரை "X" என மாற்றினார்

இந்த முடிவுகள் பலருக்கு பிடிக்கவில்லை. சிலர் அவரை விமர்சித்தார்கள். சில விளம்பரம் செய்பவர்கள் தங்களது விளம்பரங்களை நிறுத்தி விட்டார்கள். இதனால், தளத்திற்கு வருமானம் குறைந்தது. இதைத் தொடர்ந்து X தளத்தின் மதிப்பு குறைந்து, பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மஸ்க் தனிப்பட்ட முறையில் ஒரு வேலை நிறுத்தம் செய்தார், உடனடியாக ஒரு மென்பொருள் பொறியாளரை பணிநீக்கம் செய்தார். இதுபோன்ற சம்பவங்கள் பல்வேறு சட்ட பிரச்சனைகள் உருவாக்கின. முன்னாள் ஊழியர்கள் நாங்கள் எதிர்பார்த்த சம்பளங்கள் கிடைக்கவில்லை என்றும் கூறினர். சிலர் மஸ்க்கு எதிராக வழக்குகள் தொடர்ந்தனர்.
எல்லா சிரமங்களுக்கும் மத்தியிலும், மஸ்க் தனது இலக்கில் உறுதியாக இருந்தார். அவர் "xAI" என்ற புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை துவக்கினார். மேலும், X தளத்தை ஒரு பன்முக டிஜிட்டல் சேவை மையமாக மாற்றத் திட்டமிட்டார். அதாவது, X தளம் இனிமேல் வெறும் சமூக ஊடகத்திற்காக இல்லாமல், ஆன்லைன் பணம் பரிமாற்றம், தகவல் சேவைகள், வீடியோ பகிர்வு போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டார்.
Sequoia Capital, Fidelity Investments போன்ற பெரிய முதலீட்டாளர்கள், மஸ்க்கின் திட்டத்தில் நம்பிக்கை வைத்தனர். இதனால், சில மாதங்களில் X தளத்தின் மதிப்பு மெதுவாக உயரத் தொடங்கியது. இறுதியில், 2025 மார்ச் 20 அன்று, X தளத்தின் மதிப்பு மீண்டும் 41.8 பில்லியன் டாலராக ஆனது. இதனால் மஸ்க் மீண்டும் அவருடைய முதலீட்டை திரும்ப பெற முடிந்தது.
இப்போதைக்கு, மஸ்க் வெற்றி கண்டதாகவே தோன்றினாலும், எதிர்காலத்தில் சவால்கள் இன்னும் உள்ளன. முக்கியமாக, மிகுந்த கடன் (debt) இருக்கிறது. அதை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. விளம்பரம் செய்பவர்களின் நம்பிக்கை மீண்டும் கிடைக்க வேண்டியுள்ளது. பயனர்கள் அதிகமாக சேர வேண்டும், இல்லையெனில் தளம் வளர்ச்சி காண முடியாது. புதிய சேவைகள் மக்கள் இடையே பிரபலமடைய வேண்டும்.
எலான் மஸ்க் ஒரு துணிச்சலான தொழில்நுட்ப தலைவர். அவருடைய "X" திட்டம் பல சிக்கல்களுக்கு நடுவிலும் இன்று வெற்றி அடைந்துள்ளது. ஆனால், இது நீடிக்குமா? பயனர்கள் மற்றும் விளம்பரம் செய்பவர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் வருவார்களா? X தளம் உண்மையிலேயே ஒரு புதிய டிஜிட்டல் உலகமாக மாறுமா என்பது நேரம் தான் பதில் சொல்லும்.
மஸ்க் எடுத்துள்ள பயணம் சாதாரணமில்லை. அவர் சந்தித்துள்ள சவால்கள், எடுத்த முடிவுகள், மற்றும் மீட்டெடுத்த வெற்றி, தொழில்நுட்ப உலகில் முக்கியமான உதாரணமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications