இந்தியாவின் முன்னணி சிமெண்ட் உற்பத்தியாளரான அல்ட்ராடெக் சிமெண்ட், தனது சந்தை ஆதிக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் அதானி குழுமம் புதிதாக வாங்கப்போகும் சிமெண்ட் நிறுவனம் என செய்தி வெளியானது மூலம் முதலீட்டாளர்களின் கவனத்தை பெற்ற ஸ்டார் சிமெண்ட் தற்போது குறிப்பிட்டத்தக்க பங்குகளை பிர்லா குழுமத்திற்கு விற்க முடிவு செய்துள்ளது.
பிர்லா குழுமத்தின் சிமெண்ட் பிரிவான அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழு, வடகிழக்கு பகுதியில் சிமெண்ட் வர்த்தக சந்தையில் தனது ஆதிக்கத்தை மேம்படுத்த இப்பகுதியில் பிரபலமான பிராண்டாக இருக்கும் ஸ்டார் சிமெண்ட் நிறுவனத்தில் சுமார் 8.69% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது.

அதானி குழுமத்திடமிருந்து அதிகரித்து வரும் போட்டியின் காரணமாக, சந்தைப் பங்கீட்டை அதிகரிக்க அல்ட்ராடெக் நிறுவனம் தொடர்ந்து சிறு நிறுவனத்தில் பங்குகளை வாங்கி வருகிறது. டந்த வாரம் அதானி குழுமம் ஸ்டார் சிமெண்ட்-ஐ வாங்க போட்டிப்போட்ட நிலையில் இந்த வாரம் அல்ட்ராடெக் சிமெண்ட் 8.69% பங்குகளை வாங்க சீட்டை பிடித்துள்ளது.
ஸ்டார் சிமெண்ட் நிறுவனத்தின் சில முதலீட்டாளர்கள் மற்றும் துணை நிறுவனங்கள் பங்குகளை அல்ட்ராடெக் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய விருப்பம் தெரிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஸ்டார் சிமெண்ட் நிறுவனத்தின் 3.70 கோடி பங்குகளை அதிகபட்சமாக ரூ.235/-க்கு வாங்க அல்ட்ராடெக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மொத்த பங்கு விற்பனை மதிப்பு 851 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பகுதியில் வலுவான வர்த்தக சந்தை உடன் செயல்படும் ஸ்டார் சிமெண்ட் நிறுவனம் தற்போது 7.7 மில்லியன் டன் (MTPA) உற்பத்தி திறன் கொண்டுள்ளது. மேகாலயாவில் ஒரு ஒருங்கிணைந்த தொழிற்சாலை மற்றும் நான்கு அரைக்கும் நிலையங்கள் உள்ளிட்ட உற்பத்தி வசதிகளை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் தனது உற்பத்தி திறனை 25 MTPA ஆக அதிகரிக்கும் திட்டத்தை ஸ்டார் சிமெண்ட் நிறுவனம் கொண்டுள்ளது.
ஸ்டார் சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகள் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மும்பை பங்குச்சந்தையில் 8 சதவிகிதம் வரை விலை உயர்ந்தன. அல்ட்ராடெக் நிறுவனத்தின் பங்குகளும் லேசான உயர்வை கண்டன.
ஸ்டார் சிமெண்ட் நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் உள்ளது. 2022-23 நிதியாண்டில் ரூ. 2,221.81 கோடியாக இருந்த இந்நிறுவனத்தின் வருவாய், 2023-24 நிதியாண்டில் ரூ. 2,910.66 கோடியாக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications