உலக அளவில் டெக் நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்களுடைய ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணமே இருக்கின்றன. நடப்பு ஆண்டில் மட்டும் கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், மெடா என முன்னணி நிறுவனங்கள் அனைத்துமே ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி இருக்கின்றன.
2025ஆம் ஆண்டு தொடங்கியது முதல் இந்த 10 மாதங்களில் உலகம் முழுவதும் 218 நிறுவனங்கள் 1, 12, 732 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி இருக்கின்றன. அமேசான் நிறுவனம் அண்மையில் தான் தங்களுடைய கார்ப்பரேட் ஊழியர்களில் 14,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

இந்தியாவில் டிசிஎஸ் நிறுவனம் 12 ஆயிரம் ஊழியர்களை வேலை விட்டு நீக்குவதாக கூறிவிட்டு இதுவரை சுமார் 20000 பேரை வேலையில் இருந்து அனுப்பி இருக்கிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்களும் 10,000க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கின்றன. இவை அனைத்துமே அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தகவல்கள், அதிகாரபூர்வமாக இல்லாமல் கட்டாயப்படுத்தி ஊழியர்களை ராஜினாமா செய்ய வைக்கும் நிகழ்வுகளும் பல்வேறு நிறுவனங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
உண்மையில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை என்பது கிட்டத்தட்ட சுமார் 2 லட்சம் வரை இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இத்தகைய சூழலில் ஐபிஎம் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் ஆயிரக்கணக்கானவர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இன்டர்நேஷனல் பிசினஸ் மெஷின் கார்ப்பரேஷன் என அழைக்கப்படக்கூடிய அமெரிக்காவை சேர்ந்த ஐபிஎம் நிறுவனம் தங்களுடைய நிறுவனத்தில் இந்த காலாண்டிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவித்திருக்கிறது.

தங்களுடைய நிறுவனத்தின் பிசினஸ் மாடல் முழுக்க முழுக்க சாப்ட்வேர் மற்றும் சேவை பிரிவுகளை நோக்கி மறு கட்டமைப்பு செய்ய இருப்பதாக ஐபிஎம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது . மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் ஒற்றை இலக்க சதவீதத்தில் ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர் என்ற அதிகாரப்பூர்வமான எண்ணிக்கையை வெளியிடவில்லை .
கடந்த காலாண்டில் ஐபிஎம் முக்கியமான கிளவுட் சாப்ட்வேர் பிரிவில் வளர்ச்சி அடையாமல் மந்தநிலையை சந்தித்தது இந்த சூழலில் தான் இந்த நிறுவனம் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளையும் சேர்ந்த ஊழியர்கள் இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது. 2024ஆம் ஆண்டு இறுதியில் ஐபிஎம் நிறுவனத்தில் 2,70,000 ஊழியர்கள் வேலை செய்து வந்தனர் .
கடந்த சில மாதங்களாகவே பல்வேறு நிறுவனங்களும் தொடர்ச்சியாக ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை அறிவித்த வண்ணம் இருக்கின்றன . ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. டெக் நிறுவனங்கள் பல்வேறு வேலைகளையும் ஏஐ கருவிகளைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்கின்றன. இதன் காரணமாக அந்த பணிகளில் ஏற்கனவே இருந்த மனிதர்களை வேலை விட்டு தூக்கி விட்டனர் . புதிதாக அந்த இடங்களுக்கு மனிதர்கள் தேவைப்படவும் இல்லை என தெரிவிக்கின்றன.
ஏஐ தொழில்நுட்பம் டெக் நிறுவனங்களுக்கு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து வருவாயை பெருக்கியுள்ளது. இதனால் நிறுவன முதலாளிகளுக்கு மட்டும் செல்வம் பெருகுகிறது. வருங்காலத்தில் உலகளவில் இது பெரிய பொருளாதார சமமின்மையை ஏற்படுத்தும்.
More From GoodReturns

எங்களுக்கு இனி Engineers தேவையே இல்ல; AI போதும் – Salesforce CEO திமிர் பேச்சு..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications